தீவிரவாதிகளை மணம் செய்ய மறுத்த கர்ப்பிணிகள் உள்பட 150 பேர் தலையை துண்டித்து கொலை
பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை திருமணம் செய்ய மறுத்த கர்ப்பிணிகள் உள்பட 150 பெண்களை தீவிரவாதி ஒருவன் தலையை துண்டித்து கொலை செய்துள்ளான்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஈரான் அகதி ஹாரூன் மோனிஸ் ஹோட்டல் ஒன்றுக்குள் புகுந்து பலரை பிணையக் கைதிகளாக பிடித்தது, பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பள்ளிக்குள் தாலிபான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தி 132 குழந்தைகள் உள்பட 141 பேர் பலியானது ஆகிய சம்பவங்களால் உலக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில் ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது குறித்து ஈராக்கின் மனித உரிமை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தீவிரவாதிகளை திருமணம் செய்ய மறுத்ததால் பலுஜா நகரில் கர்ப்பிணிகள் உள்பட 150 பெண்களை அபு அனஸ் அல் லிபி என்ற தீவிரவாதி தலையை துண்டித்து கொலை செய்தான் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஈராக்கில் தீவிரவாதிகள் 50 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை இரக்கமின்றி சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்த கையோடு பெண்கள் தலை துண்டிக்கப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது.
தீவிரவாதிகள் பலுஜா நகரை கைப்பற்றி அதை கடந்த 11 மாதங்களாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இங்கு ஏராளமான ஆண்களை கொன்றுவிட்டு அவர்களது மனைவிகள், கர்ப்பிணி மனைவிகளை தங்களை திருமணம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர்
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications