லெபனான் வீரர் தலையைத் துண்டித்து ஐ.எஸ்.ஐ.எஸ். மீண்டும் வெறிச்செயல்
பெய்ரூட்: அமெரிக்க பத்திரிகையாளர்களின் தலையை துண்டித்த ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் தற்போது லெபனான் வீரர் ஒருவரின் தலையைத் துண்டித்து வெறியாட்டம் போட்டுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து இஸ்லாமிய நாடு அமைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. சிரியாவில் உள்நாட்டு போர் செய்திகளை சேகரிக்க சென்ற அமெரிக்க பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் போலி, ஸ்டீவன் சாட்லாப் ஆகியோரை அந்த இயக்கம் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றது.

பின்னர் இருவரையும் தலையை துண்டித்து கொலை செய்து விட்டனர். இந்த நிலையில் தற்போது அந்த இயக்கத்தினர் லெபனான் நாட்டைச் சேர்ந்த போர் வீரர் ஒருவரை தலையை துண்டித்து தங்கள் வெறிச்செயலை நிறைவேற்றியுள்ளனர்.
கடந்த மாதம் லெபனான் எல்லைப்பகுதியான ஆர்சால் நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கும் லெபனான் படை வீரர்களுக்கும் இடையே கடும்சண்டை ஏற்பட்டது. அப்போது லெபனான் படை வீரர்கள் 19 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வந்தனர்.
அவர்களில் அலி அல்-செய்யது என்பவரை கடந்த வாரம் தலையை துண்டித்து கொலை செய்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மற்றொரு வீரர் அப்பாஸ் மெட்லிஜ் என்பவர் தப்பி செல்ல முயற்சித்தபோது தீவிரவாதிகளால் தலையை துண்டித்து கொல்லப்பட்டார்.
இதுதொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications