Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

”நாங்க எம்.ஹெச்.370 விமானத்தைப் பார்த்தோம்” – புயலைக் கிளப்பும் குடஹூவாதூ தீவுவாசிகள்

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் எம்.ஹெச்.370-ஐ பார்த்தோம் என்று இந்திய பெருங்கடலில் உள்ள குட்டித்தீவான குடஹூவாதூ தீவுவாசிகள் தெரிவித்து உள்ளனர்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.ஹெச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 5 இந்திய பயணிகளும் இருந்தனர்.

அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. பின்னர் அந்த விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது ஓராண்டாகி விட்ட நிலையிலும் உறுதியாக தெரியவரவில்லை.

வரிசை கட்டும் மர்மங்கள்:

வரிசை கட்டும் மர்மங்கள்:

மாயமான விமானம் விபத்துக்கு உள்ளாகி விட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனினும் மாயமான விமானத்தை தேடும் பணி இன்னொரு பக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

வரலாற்றில் முதல் முறை:

வரலாற்றில் முதல் முறை:

இதனால் அந்த விமானம் பற்றிய சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அனேகமாக மாயமான விமானத்தை ஒரு வருடங்களுக்கும் மேலாக தேடுவது வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதனால் அந்த விமானம் பற்றிய சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அனேகமாக மாயமான விமானத்தை ஒரு வருடங்களுக்கும் மேலாக தேடுவது வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தொடரும் தேடுதல் வேட்டை:

தொடரும் தேடுதல் வேட்டை:

இதற்கிடையே மாயமான மலேசிய விமானம், வேண்டுமென்றே அண்டார்டிகா பனிப்பிரதேசத்தை நோக்கி கொண்டு செல்லப்பட்டதாக விமான போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதுபற்றி இங்கிலாந்தைச் சேர்ந்த தி மிரர் நாளிதழ் ஆவணப்படம் ஒன்றையும் வெளியிட்டது.

அண்டார்டிகா நோக்கி பயணம்:

அண்டார்டிகா நோக்கி பயணம்:

அதில் எம்.ஹெச்.370 விமானம் 3 முறை தனது பாதையில் இருந்து திசை திருப்பப்பட்டது. 3 ஆவது திருப்பத்தின்படி அண்டார்டிகா நோக்கி அந்த விமானம் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டு இருந்தது.

விரைவில் விடை தெரியும்:

விரைவில் விடை தெரியும்:

இதுபற்றி பிரபல விமான போக்குவரத்து நிபுணர் மால்கம் பிரெனர், விமானிகள் அறையில் இருந்த ஒருவரால் விமானம் வேண்டுமென்றே அண்டார்டிகா நோக்கி இயக்கப்பட்டது. அந்த விமானம் என்ன ஆனது என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும் என்று உறுதியாக கூறினார்.

சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்:

சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்:

அமெரிக்க-தாய்லாந்து ராணுவத்தினர் இணைந்து நடத்திய கூட்டு போர் பயிற்சியின்போது மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இன்னொரு தகவல் கூறியது.

கடத்தப்பட்டதா விமானம்:

கடத்தப்பட்டதா விமானம்:

மேலும், ஹிட்ச் என்ற தீவிரவாதிதான் இந்த விமானத்தை ஆப்கானிஸ்தானுக்கு கடத்திச்சென்றவர். விமானம் பாகிஸ்தான் எல்லையில் காந்தகார் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்று ரஷியாவில் இருந்து வெளிவரும் மோஸ்கோவ்கி கொம்சோலெட்ஸ் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.

விமானத்தை பார்த்தோம்:

விமானத்தை பார்த்தோம்:

இந்நிலையில் மாயமான மலேசிய விமானம் எம்.ஹெச்.370ஐ பார்த்தோம் என்று இந்திய பெருங்கடலில் உள்ள குட்டித்தீவான குடஹூவாதூ தீவுவாசிகள் தெரிவித்து உள்ளனர்.

தாழ்வாக பறந்து சென்ற விமானம்:

தாழ்வாக பறந்து சென்ற விமானம்:

மாலத்தீவு நாட்டின் குடஹூவாதூ தீவை சேர்ந்த மக்கள், விமானம் மாயமானதாக கூறப்படும் மார்ச் 8ஆம் தேதி அதிகாலையில் விமானம் ஒன்று தாழ்வாக பறந்து சென்றதை பார்த்தோம். விமானமானது, மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் தொடர்பான புகைப்படங்களில் இருந்தப்படியே இருந்தது. விமானம் மிகவும் பெரியதாக காணப்பட்டது என்று கூறியதாக ஆஸ்திரேலியாவின் வாரநாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.

மாலத்தீவு நாளிதழ் வெளியீடு:

மாலத்தீவு நாளிதழ் வெளியீடு:

வெள்ளை நிறத்திலான ஜம்போ செட் விமானம் மிகவும் தாழ்வாக வடக்கில் இருந்து தென்கிழக்காக சென்றது, விமானத்தில் சிவப்பு மற்றும் ஊதா நிறத்திலான மார்க் காணப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர் என்ற தகவல் மாலத்தீவு நாளிதழில் வெளியாகியது.

புதுமையான காட்சி:

புதுமையான காட்சி:

இதுதொடர்பாக தீவை சேர்ந்த அப்து ராஷீத் இப்ராகீம் ஆஸ்திரேலியா வாரநாளிதழக்கு பேட்டி அளித்து பேசுகையில், "விமானம் மாயமானது என்று எனக்கு தெரியாது. நான் வேகமாக வீட்டிற்கு சென்று எனது மனைவிடம் நடந்தை கூறினேன். மிகவும் புதுமையான விமானத்தை பார்த்ததாக எனது உறவினர்களிடம் தெரிவித்தேன்.

மிகப்பெரிய விமானம்:

மிகப்பெரிய விமானம்:

நான் இதற்கு முன்பாக பார்த்த விமானங்களைவிட இது மிகவும் பெரிய விமானமாக இருந்தது. நான் மாயமான விமானத்தின் புகைப்படத்தை பார்த்து உள்ளேன். நான் அந்த விமானத்தையே பார்த்து இருப்பேன் என்று நம்புகிறேன். விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் இங்கு வரவேண்டும் என்று நான் நினைக்கிறேன்," என்று தெரிவித்து உள்ளார்.

தாழ்வாக பறந்து சென்ற விமானம்:

தாழ்வாக பறந்து சென்ற விமானம்:

சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொருவர் பேசுகையில், "எங்களுடைய தீவில் இவ்வளவு தாழ்வாக விமானம் பறந்ததை நாங்கள் யாரும் இதுவரையில் பார்த்தது கிடையாது. நாங்கள் கடல் விமானங்களை பார்த்து இருக்கிறோம். இது அதுபோன்றது கிடையாது.

கதவு கூட கண்ணில் பட்டது:

கதவு கூட கண்ணில் பட்டது:

விமானத்தின் கதவைகூட என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது. நான் மட்டுமின்றி தீவில் உள்ள அனைத்து மக்களுமே இதனை பார்த்தனர். அவர்களும் இதே எண்ணத்திலே உள்ளனர். பெரும் சத்தம் கேட்டது என்ன நடக்கிறது என்று பார்க்க வீட்டிற்குள் இருந்து பலரும் வெளியே வந்தனர்." என்று கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+