லெபனானில் கொடூரமான வெடிபொருள் பயன்படுத்தி வீடுகளை தாக்கிய இஸ்ரேல்.. மனித உரிமை அமைப்பகம் பகீர்
தெஹ்ரான்: அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டு தாக்குதல் நடத்தி வரும் நிலையில், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில், இஸ்ரேல் மக்கள் வசிக்கும் இடங்களில் வெள்ளை பாஸ்பரஸ் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் நடத்தி வரும் தாக்குதல் 10-வது நாளை எட்டியுள்ளது. ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்காமல் விட மாட்டோம் என்று கூறியுள்ள ஈரான், பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகள் மீது ஈரான் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.

வெள்ளை பாஸ்பரசை பயன்படுத்தி தாக்குதல்
அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டு தாக்குதல் நடத்தி வரும் நிலையில், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் லெபானான் மீதும் வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த நிலையில்தான், லெபனான் மீதான தாக்குதலுக்கு சட்ட விரோதமாக வெள்ளை பாஸ்பரசை இஸ்ரேல் பயன்படுத்தியதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த மார்ச் 3 ஆம் தேதி லெபனானில் தெற்கு பகுதியில் உள்ள யோஹ்மோர் நகரம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. குடியிருப்பு பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் வெள்ளை பாஸ்பரஸ் பயன்படுத்தியுள்ளது சட்ட விரோதமானது என்று தெரிவித்துள்ள மனித உரிமை கண்காணிப்பகத்தின் லெபனானை சேர்ந்த ஆய்வாளர் ராம்ஸி கைஸ், இது பொதுமக்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
உடனடியாக நிறுத்த வேண்டும்
இது போன்ற தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும். குடியிருப்பு பகுதிக்குள் இந்த தாக்குதலை நடத்தக்கூடாது என்று அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். குடியிருப்புகள் மீது வான்வெளியில் வெடித்த வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளைக் காட்டும் ஏழு படங்களைச் சரிபார்த்து, புவிஇருப்பிடத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், குறைந்தது இரண்டு வீடுகளிலும் ஒரு காரிலும் தீ விபத்து ஏற்பட்டதற்கான ஆதாரங்களையும் பதிவு செய்தது, மனித உரிமை கண்காணிப்பகம். லெபனான் ஆராய்ச்சியாளர் ரம்சி கைஸ் கூறுகையில், "இஸ்ரேலிய இராணுவம் குடியிருப்புகள் மீது வெள்ளை பாஸ்பரஸை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவது மிகவும் கவலையளிக்கிறது. இது பொதுமக்களுக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். வெள்ளை பாஸ்பரஸின் எரியூட்டும் தன்மை மரணத்தையோ அல்லது ஆயுள் முழுவதும் துன்புறுத்தும் கொடூரமான காயங்களையோ ஏற்படுத்தும்" என்றார்.
வெள்ளை பாஸ்பரஸ் என்றால் என்ன?
வெள்ளை பாஸ்பரஸ் என்பது பீரங்கி குண்டுகள், வெடிகுண்டுகள், ராக்கெட்களில் பயன்படும் ரசாயனப் பொருள். ஆக்ஸிஜனுடன் சேரும்போது தீப்பிடித்து எரியும். இது வீடுகள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கட்டமைப்புகளில் தீ விபத்துகளை ஏற்படுத்தும். சர்வதேச மனிதாபிமான சட்டப்படி, மக்கள் வசிக்கும் பகுதிகளில் வான்வெளியில் பாஸ்பரஸ் பயன்படுத்துவது பாகுபாடற்ற செயலாகும்.
பாதிப்பைத் தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இது மீறுகிறது. வெள்ளை பாஸ்பரஸ், புகைத்திரை உருவாக்குதல், இலக்குகள் குறித்தல், எதிரிப் படையினர், உபகரணங்களைத் தாக்குதல் போன்ற ராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுகிறது. எனினும், மக்கள் நிறைந்த பகுதிகளில் இதை உபயோகிப்பது சட்டவிரோதமாக பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications