அதிகாலையில் சரமாரி அட்டாக்.. ஈரானை தாக்க தொடங்கிய இஸ்ரேல்.. அணு அமைப்புகள் மீது பகீர் தாக்குதல்
டெஹ்ரான்: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் விமானப்படை ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்காவின் உதவி இல்லாமலே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
வெள்ளிக்கிழமை அதிகாலை தெஹ்ரானுக்கு வடகிழக்கே வெடிச்சத்தம் கேட்டதாக ஈரான் அரசு செய்தி நிறுவனமான நூர் நியூஸ் உறுதிப்படுத்தியது. இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தத் தாக்குதல்கள் 10க்கும் மேற்பட்ட அணு மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ஈரான் சில நாட்களில் 15 அணு குண்டுகளை உருவாக்கும் அளவுக்குப் போதுமான பொருட்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய இரண்டு அமெரிக்க அதிகாரிகள், "இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது" என்பதை உறுதிப்படுத்தினர். மேலும் "இஸ்ரேலின் இந்த தாக்குதலில் அமெரிக்காவின் ஈடுபாடு அல்லது உதவி எதுவும் இல்லை" என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
தேசிய அவசர நிலையை அறிவித்தது இஸ்ரேல்
ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நாடு தழுவிய அவசர நிலையை அறிவித்தார். இஸ்ரேல் மற்றும் அதன் பொதுமக்கள் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மிக விரைவில் நடக்க வாய்ப்பு உள்ளது, ஈரான் நமக்கு பதிலடி கொடுக்க வாய்ப்புள்ளதாக காட்ஸ் எச்சரித்துள்ளார். நாடு முழுவதும் இந்த அவசர நிலையை அமல்படுத்த அவர் ஒரு சிறப்பு உத்தரவில் கையெழுத்திட்டார்.
அவர் அளித்த பேட்டியில், "இஸ்ரேல் அரசு ஈரான் மீது முதல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் அதன் பொதுமக்கள் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான பதிலடி தாக்குதல் எதிர்பார்க்கப்படுகிறது" என்று கூறினார்.
இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்ட நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பாதுகாப்பு அமைச்சரவையின் அவசர கூட்டத்தை கூட்டினார்.
அணு அமைப்புகள் மீது அட்டாக்
அணுவை வெறுமனே அணு ஆயுதம் உருவாக்க பயன்படுத்த முடியாது. யுரேனியத்தை அப்படியே எடுத்து அணு குண்டு போட முடியாது. அதை பயன்படுத்தும் முன் செறிவூட்ட வேண்டும். ஈரான் இப்போது யுரேனியத்தை 60-70 சதவிகிதம் தூய்மைக்கு செறிவூட்டுகிறது, மேலும் செறிவூட்டப்பட்டால், அது அணு ஆயுதம் தயாரிக்க ஏதுவாகும். விரைவில் இதனால் ஈரான் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் முடியும். அவசரமாக தேவைப்பட்டால் உடனே அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கவும் முடியும்.
இப்படிப்பட்ட நிலையில்தான் இஸ்ரேல் தாக்குதல் நடந்து உள்ளது. இந்தத் தாக்குதல்கள் 10க்கும் மேற்பட்ட அணு மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இஸ்ரேலுக்கு பயங்கரமான ஐடியா ஒன்றை கொடுத்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அதன்படி ஈரான் நாட்டிடம் இருக்கும் அணு உலகைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும். அப்படி நடத்துங்கள்.. மற்றதை பற்றி கவலைப்பட வேண்டாம். பின்னர் நடக்க போவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் அணு உலைகளை குறி வையுங்கள் என்று டிரம்ப் ஐடியா கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரான் மீது இஸ்ரேல் டிரம்ப் சொற்படியே தாக்குதல் நடத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications