ஐநா பொதுச்செயலாளர் இஸ்ரேலில் நுழைய தடை.. அதிரடியாக வெளியான அறிவிப்பு.. ஈரான் ஆதரவு தான் காரணமா?
டெல்அவிவ்: இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரேலுக்குள் நுழைய ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்க்கு தடை விதித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் அதிரடியாக அறிவித்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாலத்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கு எதிரான இஸ்ரேல் போர் தொடங்கி ஓராண்டை நெருங்கி விட்டது. இந்த போருக்கு நடுவே தான் இஸ்ரேல் - லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இடையேயான மோதல் என்பது தொடங்கியது.

தற்போது இந்த மோதல் என்பது இஸ்ரேல் - ஈரான் மோதலாக உருவாகி உள்ளது. ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரூல்லாவை இஸ்ரேல் வான்வெளி தாக்குதலில் கொன்றது. இதனால் பொங்கி எழுந்துள்ள ஈரான் நேற்று அதிரடியாக 180 முதல் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நோக்கி ஏவி தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் - ஈரான் மோதிக்கொள்வது ஏன்? எளிமையாக புரியும் 8 டைம்லைன் பாயிண்ட்டுகளை பாருங்க
இந்த தாக்குதலில் இஸ்ரேலில் பெரிய அளவு சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் குறிப்பிட்ட அளவுக்கு இஸ்ரேல் சேதத்தை எதிர்கொண்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி இன்னும் இஸ்ரேல் எந்த தகவலையும் சொல்லவில்லை. ஈரான் தரப்பிலும் இஸ்ரேலில் ஏற்பட்ட சேதம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே தான் இஸ்ரேலுக்குள் நுழைய ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்க்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஜ். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛‛ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் இஸ்ரேலில் நுழைய தடை விதித்துள்ளேன். இஸ்ரேல் மீதான ஈரானின் கொடூரமான தாக்குதலை சந்தேகத்துக்கு இடமின்றி கண்டிக்க முடியாத எவரும் ஸ்ரேலுக்குள் நுழைய தகுதியற்றவர்கள். பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைகள் செய்யும் ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் இப்போது ஈரானை சேர்ந்த தீவிரவாதிகளை ஆதரிக்கும் அன்டொனியோ குட்டெரஸ் ஐநா சபையின் வரலாற்றின் கரையாக இருப்பார்’’ என கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்குள் நுழைந்து தீவிரவாதிகள் தாக்குதல்.. ஈரான் தாக்குதலுக்கு நடுவே கடும் துப்பாக்கி சண்டை
முன்னதாக நேற்றைய தினம் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின்போது ஈரானை கண்டிக்காத ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் இஸ்ரேலை கண்டித்து இருந்தார். அதாவது காசாவில் ஹமாசுக்கு எதிரான போர் மற்றும் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான தாக்குதலை உடனடியாக இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதனால் தான் கோபமடைந்த இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டோனியோ குட்டெரஸை இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதித்து அதிரடியாக அறிவித்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications