இஸ்ரேல் - ஈரான் மோதிக்கொள்வது ஏன்? எளிமையாக புரியும் 8 டைம்லைன் பாயிண்ட்டுகளை பாருங்க

Subscribe to Oneindia Tamil

டெல்அலிவ்: காசாவுடன் போர் என்பது இஸ்ரேலுக்கு லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதலாக உருவானது. இந்த மோதல் தற்போது இஸ்ரேல் - ஈரான் மோதலாக உருவாகி உள்ளது. நேற்றைய தினம் இஸ்ரேல் மீது ஈரான் 200 ஏவுகணைகளை ஏவி தாக்கி உள்ள நிலையில் இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் ஏற்பட என்ன காரணம்? இருநாடுகளுக்கும் என்ன பிரச்சனை? என்பதை 8 பாயிண்ட்டுகளில் ஈஸியாக தெரிந்து கொள்ளலாம்.

காசாவின் ஹமாஸ் அமைப்புக்கு எதிரான இஸ்ரேல் போர் தொடங்கி ஓராண்டை நெருங்கி விட்டது. இந்த போருக்கு நடுவே தான் இஸ்ரேல் - லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இடையேயான மோதல் என்பது தொடங்கியது. தற்போது இந்த மோதல் என்பது இஸ்ரேல் - ஈரான் மோதலாக உருவாகி உள்ளது.

israel iran war israel iran

இஸ்ரேல் நாட்டுடன் ஈரான் நேரடியாக எல்லையை பகிர்ந்து கொள்ளவில்லை. இருப்பினும் கூட ஈரான் தற்போது நேரடியாக களமிறங்கி உள்ளது. நேற்றைய தினம் ஈரான் 180 முதல் 200 ஏவுகணைகளை இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நோக்கி ஏவி தாக்குதல் நடத்தியது.

இதனால் இஸ்ரேல் கோபமாகி உள்ளது. ஈரானின் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். அதோடு இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கி உள்ளதால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் இஸ்ரேல் - ஈரான் நாடுகள் மோதிக் கொள்வது ஏன்? இருநாடுகளின் மோதலுக்கும் என்ன காரணம்? என்பது பற்றி பலருக்கும் குழப்பம் உள்ளது. அதற்கு விடை தெரிய இந்த 8 பாயிண்டுகளை தேதி வாரியாக கூறினால் நன்கு புரியும்.

ஈரானிடம் அணு ஆயுதங்கள் உள்ளதா? இஸ்ரேலை சூழும் மிக பெரிய ஆபத்து! உலக நாடுகள் பதறுவது ஏன்


2023 அக்டோபர் 7: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது ஈரான் ஆதரவு அமைப்பாகும். இந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஈரானின் அப்போதைய தலைவர் இப்ராகிம் ரெய்சி பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்தார். சுதந்திரமான பாலஸ்தீனம் அமைய இந்த தாக்குதல் முக்கியம் என்று அவர் பாராட்டினார். அதேவேளையில் ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலை அவர் கண்டித்ததோடு கடுமையாக விமர்சனம் செய்தார்.

2023 டிசம்பர் 25: சிரியாவில் சீனியர் குவாட் படையின் அதிகாரி ராஜி மவுசாவி கொல்லப்பட்டார். அவரை இஸ்ரேல் தான் கொன்றதாக ஈரான் குற்றம்சாட்டியது. ராஜி மவுசாவி ஈரான் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு 2024 ஜனவரியில் சிரியாவின் டமாஸ்கஸில் இஸ்ரேல் சதித்திட்டம் தீட்டி சிரியாவுக்கான உளவுத்துறை தலைவர் உள்பட 5 பேரை கொன்றதாக ஈரான் கூறி பதிலடி கொடுக்கப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.

2023 டிசம்பர் 25: அன்று, சிரியாவில் குத்ஸ் படையின் மூத்த அதிகாரி ரஸி மௌசாவியை இஸ்ரேல் கொன்றதாக ஈரான் குற்றம் சாட்டியது. ஜனவரி 2024 இல், டமாஸ்கஸில் நடந்த ஒரு வேலைநிறுத்தம் இஸ்ரேலுக்குக் காரணம் என்று கூறப்பட்டது, சிரியாவுக்கான குழுவின் உளவுத்துறைத் தலைவர் உட்பட ஐந்து புரட்சிகர காவலர் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அதிபர் ரைசி மிரட்டல் விடுத்துள்ளார்.

2024 ஏப்ரல் 1: சிரியாவின் டமாஸ்கஸ் பகுதியில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் ஈரான் ஆதரவு அமைப்புகளை சேர்ந்த 2 ஜெனரல்கள் உள்பட சில உறுப்பினர்கள் இறந்ததாக ஈரான் தெரிவித்தார். இதனை கேட்ட இஸ்ரேல் இறந்தவர்களை பயங்கரவாதிகள் என்று கூறியது. இது ஈரானை கோபப்படுத்தியது.

2024 ஏப்ரல் 13: சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக நடத்திய முதல் தாக்குதல் இதுதான். இந்த தாக்குதலில் பெரும்பாலான ஏவுகணைகள், ட்ரோன்கள் இஸ்ரேலால் இடைமறித்து அழிக்கப்பட்டது. இதனால் இஸ்ரேல் சேதமின்றி தப்பித்தது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஏப்ரல் 19 ம்தேதி ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது.

இஸ்ரேலுக்கு தொடர்ந்து அமெரிக்கா ஆதரவு அளிப்பது ஏன்? யூதர்களின் அரசியல் இதுதான்! முழு பின்னணி


2024 ஜூலை 31: ஹமாஸ் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் டெக்ரானில் வைத்து கொல்லப்பட்டார். வான்வெளியாக வந்த ஏவுகணை தாக்குதலில் அவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலை இஸ்ரேல் தான் நடத்தியதாக கூறப்படுவதால் ஈரான் கடும் கோபமடைந்தது. ஏனென்றால் ஈரானின் புதிய அதிபராக மசூத் பெஜேஷ்கியானின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்றபோது இஸ்மாயில் ஹனியே இஸ்ரேல் தீர்த்து கட்டியது.


2024 செப்டம்பர் 27: பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரை இஸ்ரேல் கைவிடாததால் லெபனானில் தனது ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு மூலம் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கி நடத்தி வந்தது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வந்தது. இந்த ஹிஸ்புல்லா அமைப்பு லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் தீவிரமாக இயங்கி வருகிறது. அப்போது ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரூல்லா தங்கியிருந்த இடத்தை வான்வெளி தாக்குதல் மூலம் தரைமட்டமாக்கிய இஸ்ரேல் அவரை கொன்றது. இது ஈரானை இன்னும் கொதிப்படைய செய்தது.

2024 அக்டோபர் 1: மேற்கூறிய இந்த விவகாரங்களால் தான் இஸ்ரேல் மீது ஈரான் கடும் கோபமடைந்து நேற்று 180 முதல் 200 வகையான ஏவுகணைகளை ஏவி தாக்கி உள்ளது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. இதனால் இஸ்ரேல் - ஈரான் இடையே யுத்தம் தொடங்கும் சூழல் உருவாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+