இஸ்ரேல் தூதரகத்தில் இறங்கிய ஈரான்? துருக்கியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு! உச்சக்கட்ட பதற்றம்
இஸ்தான்புல்: துருக்கி நாட்டில் உள்ள இஸ்ரேல் தூதரக கட்டிடம் அருகே இன்று திடீரென துப்பாக்கிச் சண்டை ஒன்று வெடித்தது. அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். போலீசார் இதற்குப் பதிலடி கொடுத்த சூழலில், அதில் தாக்குதல் நடத்திய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு நபர் உயிரோடு பிடிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு ஆசிய நாடுகளில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து பதற்றம் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். முதலில் ஈரான், இஸ்ரேல் இடையே ஆரம்பித்த போர் பிறகு மெல்லப் பிராந்திய மோதலாக மாறி வருகிறது. இதற்கிடையே மற்றொரு மேற்கு ஆசிய நாடான துருக்கியிலும் இன்று பரபர தாக்குதல் ஒன்று நடந்துள்ளது.

இதற்கிடையே துருக்கியின் மிகப் பெரிய நகரமான இஸ்தான்புல்லில் உள்ள இஸ்ரேல் தூதரக கட்டிடம் அருகே இன்று திடீரென துப்பாக்கிச் சண்டை ஒன்று வெடித்தது. அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்திய இருவர் கொல்லப்பட்டனர். மேலும், ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.. இந்த தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
தாக்குதல் நடத்தியவர்கள் பெரிய துப்பாக்கிகளை ஏந்தி வந்தனர். அவர்கள் தூதரக கட்டிடத்திற்கு அருகில் திடீரென துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். நிலைமையை உணர்ந்த போலீசார் உடனடியாக தக்க பதிலடி கொடுத்தனர். போலீசார் சுற்றி வளைத்துக் கொடுத்த பதிலடி தாக்குதலில் தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மூன்றாவது நபரை போலீசார் உயிருடன் பிடித்தனர். மேலும், இந்த துப்பாக்கிச் சண்டையில் காவல் அதிகாரி ஒருவரும் காயமடைந்தார். சம்பவத்திற்குப் பிறகு, கட்டிடத்தைச் சுற்றியுள்ள பகுதி உடனடியாக சீல் வைக்கப்பட்டது. உயிருடன் பிடிக்கப்பட்ட நபரிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள துருக்கியின் நீதி அமைச்சர் அகின் குரலெக், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர் யார் அல்லது அவர்களின் நோக்கம் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இஸ்ரேல் தூதரகம் குறிவைக்கப்பட்ட நிலையில், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும் ஈரானுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications