"அந்த" விரல் முக்கியம்.. ஹமாஸ் தலைவர் சின்வாரின் விரலை வெட்டி எடுத்த இஸ்ரேல் படை! எதற்கு தெரியுமா
டெல் அவிவ்: ஹமாஸ் படையின் தலைவராக இருந்த யாஹ்யா சின்வார் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் உலா வந்து கொண்டு இருக்கிறது. இருப்பினும், அதில் அவரது விரல்களில் ஒன்று வெட்டப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. இதற்கான காரணம் குறித்து நாம் பார்க்கலாம்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த ஓராண்டிற்கு மேலாகப் போர் தொடர்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். கடந்தாண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய கொடூர தாக்குதலே இதற்குக் காரணமாகும்.

ஹமாஸ் தாக்குதல்: கடந்தாண்டு அக். 7ம் தேதி இஸ்ரேல் நாட்டில் பாராசூட், ஜூப் மூலம் உள்ளே வந்த ஹமாஸ் படை சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். கண்ணில் பட்ட அனைவரையும் தாறுமாறாகச் சுட்டனர். அதில் பல நூறு இஸ்ரேல் நாட்டினர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல பலர் காயமடைந்தனர். மேலும், இஸ்ரேல் மக்கள் பலரையும் ஹமாஸ் படை பணய கைதிகளாகவும் கடத்திச் சென்றது.
இந்த கொடூர தாக்குதலைத் தொடர்ந்தே ஹமாஸ் மீது முழு வீச்சிலான போரை இஸ்ரேல் அறிவித்தது. காசா பகுதியில் சரமாரியாக தாக்குதல் நடத்திய இஸ்ரேல் அங்குள்ள ஹமாஸ் தலைவர்களை வரிசையாகக் கொன்றது. இடையில் பணய கைதிகளை விடுவிக்கப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பலர் விடுவிக்கப்பட்டனர். அதேநேரம் இரு தரப்பிற்கும் இடையே அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் முயன்றனர். இதற்காகப் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன.
இஸ்ரேல் ராணுவம்: இருப்பினும், அதையெல்லாம் இஸ்ரேல் கேட்பதாக இல்லை. ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என்று திட்டவட்டமாக அறிவித்தது. ஹமாஸ் மீது சரமாரியான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வந்தது. கடந்த சில மாதங்களில் மட்டும் பல முக்கிய ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் வைத்துக் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்டார்.
அடுத்து அக். 7 தாக்குதலைத் திட்டம் போட்டுக் கொடுத்த ஹமாஸ் படை தலைவர் யஹ்யா சின்வாரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் செயல்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்றைய தினம் அவரும் கொல்லப்பட்டார். அதாவது நேற்று காலை காசாவில் ஒரு இடத்தில் இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸ் படைக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
கொலை: ஒரு கட்டிடத்தில் பதுங்கி இருந்த ஹமாஸ் படை அங்கிருந்த 3 பேர் இஸ்ரேல் வீரர்களை நோக்கித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் அங்கு டிரோன் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அந்த கட்டிடத்தில் எத்தனை பேர் இருந்தார்கள்.. அனைவரும் கொல்லப்பட்டனரா என்பதை உறுதி செய்ய இஸ்ரேல் ராணுவம் அங்குச் சென்றுள்ளது.
அப்போது அவர்களுக்கு மிக பெரிய ஷாக் காத்திருந்தது. ஏனென்றால், ஹமாஸ் படையின் தலைவரான சின்வார் அங்குக் கொல்லப்பட்டு இருந்தார். அவரது சடலம் அங்கு இருந்தது. இருப்பினும், அது சின்வார் தானா அல்லது அவரை போலவே இருக்கும் நபரா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவரது ஆள்காட்டி விரலைக் கட் செய்து இஸ்ரேல் ராணுவம் டிஎன்ஏ சோதனை நடத்தியுள்ளது. அதில் தான் அவர் கொல்லப்பட்டது சின்வார் தான் என்பது உறுதியானது.
கட்டை விரல்: சின்வார் சடலம் தொடர்பாக மிகக் கொடூரமான வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவை வாத்து பார்க்கும் போது அவரது வலது கையில் பலத்த காயம் இருக்கிறது.. இதனால் ரத்தம் வடிந்த நிலையில், அதைத் தடுக்க அவர் பகுதியைக் கட்டி இருக்கிறார். மேலும், அவரது வலது காலிலும் மோசமான காயம் இருக்கிறது. இருப்பினும், அது இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட காயமா அல்லது முன்பே இருந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த வீடியோவில் அவரது ஆள்காட்டி விரலை இஸ்ரேல் வீரர்கள் கட் செய்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. கொல்லப்பட்டது சின்வார் தான் என்பதை உறுதி செய்ய டிஎன்ஏ டெஸ்டிங் மற்றும் கைரேகையைச் சோதனை நடத்த இஸ்ரேல் ராணுவம் ஆள்காட்டி விரலைக் கட் செய்துள்ளது. சின்வார் ஏற்கனவே பல முறை இஸ்ரேல் சிறையில் இருந்துள்ள நிலையில், அப்போது சேகரிக்கப்பட்ட அவரது டிஎன்ஏ மற்றும் கைரேகையுடன் ஒப்பிட்டுப் பார்த்த பிறகு கொல்லப்பட்டது சின்வார் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.













Click it and Unblock the Notifications