"ஹிஸ்புல்லா ரகசிய சுரங்கங்கள் டார்கெட்.." முழு படையை இறக்கிய இஸ்ரேல்.. தகிக்கும் மத்திய கிழக்கு

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: மத்திய கிழக்கில் கடந்த சில நாட்களாகவே பதற்றமான சூழல் நிலவி வரும் சூழலில், ஹிஸ்புல்லாவை குறிவைத்து இப்போது இஸ்ரேல் தரை வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் போர் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது. உலக நாடுகள் அங்கு நிலவும் சூழலை உற்றுக் கவனித்து வருகிறது.

மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா இலக்குகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்குக் குறிவைத்து தரைவழித் தாக்குதல்களைத் தொடங்கியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

israel middles east hezbollah

ஹிஸ்புல்லா மீது தாக்குதல்: இத்தனை காலமாக வான்வழித்தாக்குதல் மட்டுமே நடந்த நிலையில், முதல்முறையாகத் தரை வழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. படையெடுப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் முன்பே இஸ்ரேல் படைகள் லெபனானுடனான நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள ஹிஸ்புல்லா சுரங்கங்களில் நுழைந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லெபனான் எல்லைக்கு அருகில் உள்ள கிராமங்களில் உள்ள இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் இப்போது தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. வடக்கு இஸ்ரேலில் மக்களுக்கு எழுந்த அச்சுறுத்தல்களைச் சரி செய்யவே இந்தத் தாக்குதலை நடத்துவதாகவும் இஸ்ரேல் தரப்பில் கூறப்படுகிறது.

நார்தன் ஏரோ: இந்த ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் ஆப்ரேஷன் நார்தன் ஏரோ என்று குறிப்பிடுகிறது. இப்போது தரை வழி தாக்குதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ராணுவத்திற்கு ஆதரவாக இஸ்ரேல் விமானப்படை மற்றும் ஐடிஎஃப் பீரங்கிகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் போர் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என்று அஞ்சப்படுகிறது.

இந்தத் தரை வழி தாக்குதலைத் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தான், லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா கோட்டையான தஹீஹ் பகுதியில் வசிப்போர் உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரித்தது. இந்த எச்சரிக்கை வந்து சில மணி நேரத்தில் பெய்ரூட்டில் தொடர் வான்வழித் தாக்குதல்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கை: பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்தி இந்த வான்வழித் தாக்குதலில் தான் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து சில நாட்களில் இந்த தரை வழி தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு வாரங்களாக இஸ்ரேல்- லெபனான் இடையே தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இதில் குறைந்தது 1000 பேர் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் இதுவரை ஈரான் நேரடியாகத் தலையிடவில்லை. ஆனால், ஒருவேளை ஈரான் இதில் நேரடியாக உள்ளே வந்தால் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்படும். அது மற்றொரு உலகப் போரின் தொடக்கமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்ற கவலையும் எழுந்துள்ளன. குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் நிலைமையைக் கூர்ந்து கவனிக்கும் மேற்குலக நாடுகள் இந்த போரை முடிவுக்குக் கொண்டு வரவே தீவிரமாக முயன்று வருகிறார்கள்.

பதறும் மேற்குலக நாடுகள்: அமெரிக்க அதிபர் பைடன் தாக்குதல் தீவிரப்படுத்தப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறுகையில், "இந்த விவகாரம் குறித்து நான் கவலைகொண்டுள்ளேன். இரு தரப்பும் சண்டை நிறுத்த வேண்டும். தாக்குதலைத் தொடரக் கூடாது.. இதற்குத் தேவையான முயற்சிகளைச் செய்து வருகிறோம்" என்றார்.

அதேபோல பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை டேவிட் லாமியும் போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தினர். மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றமான சூழலே நிலவி வரும் நிலையில், மற்ற நாடுகளும் உள்ளே வந்தால் அது சர்வதேச அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் அங்கு நடக்கும் மாற்றங்களை உலக நாடுகள் அனைத்தும் உற்றுக் கவனித்தே வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+