இந்த ஜென்மத்துல இந்தியாவுல பெட்ரோல், டீசல் விலை குறையாது.. இஸ்ரேலால் எகிறிய கச்சா எண்ணெய் விலை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெட்ரோல் விளையும் பொன் பூமிகளில் ஒன்றுதான் ஈரான். இந்நாட்டின் மீது, இஸ்ரேல் இப்போது போரை தொடங்கியுள்ள நிலையில், அது இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது. உதாரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை இப்போது குறையாது என்று சொல்லப்படுகிறது. இந்த கூற்றுக்கு வலு சேர்க்கும் வகையில், தற்போது கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருக்கிறது.

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 12% உயர்ந்துள்ளது. இதனால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 77 டாலர் என்கிற நிலையை எட்டியிருக்கிறது. விரைவில் இதன் பாதிப்புகள் இந்தியாவிலும் எதிரொலிக்க தொடங்கலாம். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு இருக்கிறது.

Israel Iran petrol diesel

இந்தியாவை பொறுத்தவரை ஈரான் நமக்கு 'படா தோஸ்து'. கச்சா எண்ணெய்யை குறைந்த விலையில் விற்று வந்தது. ஆனால், அமெரிக்காகாரன் பஞ்சாயத்தால் இந்த எண்ணெய் வர்த்தகம் முழுமையாக பாதிக்கப்பட்டது.

விரிவாக சொல்ல வேண்டும் எனில், ஈரான் அணுசக்தி நோக்கி நகர தொடங்கியது. இதை பார்த்து பதறிய அமெரிக்கா, 'அதெல்லாம் வேணாமுங்க. நாம ஒரு ஒப்பந்தத்திற்கு வருவோம்' என்று சொல்லி 'JCPOA' என்று 2015ல் ஒப்பந்தத்தை போட்டது. அதன்படி, ஈரான் தனது அணு சக்தியை ஆயுதங்களை தயாரிக்கவோ பயன்படுத்தவோ கூடாது. பதிலுக்கு, ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் நீக்கப்பட்டது.

தடைகள் நீக்கப்பட்டதால் இந்தியா ஈரானிடம் கச்சா எண்ணெய்யை வாங்கியது. எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்தது. மற்ற அரபு நாடுகளை விட 10 டாலர்கள் குறைந்த விலையில் ஈரான் நமக்கு எண்ணெய்யை விற்றது. மட்டுமல்லாது வேறு நாடுகள் 30 நாட்கள் வரைதான் நமக்கு கடன் கொடுக்கும். ஆனால், 'தோஸ்து' ஈரான் நமக்கு 90 நாட்கள் வரை கடன் கொடுத்தது. இதெல்லாம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருக்க காரணமாக இருந்தது.

எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்தால்தான் அமெரிக்காவுக்கு பிடிக்காதே! அதுவும் டிரம்ப் எனில் சொல்லவா வேண்டும்? ஈரானின் வர்த்தகத்தை பார்த்து கடுப்பான டிரம்ப், JCPOA ஒப்பந்தத்திலிருந்து நாங்க கழண்டுக்குறோம் என்று கூறிவிட்டார். அப்புறம் இந்த ஒப்பந்தம் செயல்படாமல் போனது. அதனால் ஈரான் மீது இயல்பாக தடை எழுந்தது. இந்தியாவால் எண்ணெய்யை வாங்க முடியவில்லை. கடைசியாக 2019ம் ஆண்டு மே மாதம்தான் ஈரானிலிருந்து கடைசியாக நாம் எண்ணெய்யை இறக்குமதி செய்திருந்தோம்.

இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 67 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஈரான் நமக்கு 57 டாலருக்கு விற்றிருக்கும். ஆனால் தடை இருப்பதால் இதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டால், தடை நீக்கப்படும். எனவே இந்தியாவும் எண்ணெய் வாங்கலாம் என்கிற கனவில் இருந்தது. ஆனால், 'நடுவுல இந்த கௌசிக் வந்தா?' என்கிற கணக்காக, இஸ்ரேல் இப்போது போரை தூக்கிக்கொண்டு வந்திருக்கிறது.

ஈரான் சும்மா இருக்குமா? நிச்சயம் இருக்காது. பதிலுக்கு போரை நடத்தும். இதை 'சாக்காக' வைத்து, ஈரான் மீதான தடையை அமெரிக்கா அதிகரிக்கும். இதனால் இன்னும் பல ஆண்டுகளுக்கு ஈரான் மீதான தடை நீக்கப்படாது. இந்தியாவும் எண்ணெய்யை வாங்க முடியாது.

ஒருவேளை ஈரான் எண்ணெய் கிடைத்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5-10 வரை குறையும். மட்டுமல்லாது ஈரான் இந்தியாவுக்கு ஓரளவுக்கு பக்கத்தில் இருப்பதால் டிரான்ஸ்போர்ட் செலவும் குறையும். இதனால் பெட்ரோல், டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் போட்டிருக்கும் வரியும் குறைய வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால், எரிபொருள் விலை மேலும் குறையும். இப்போ சொல்லுங்க மக்களே, நமக்கு யார் சாதகமாக இருக்கிறார்கள்? பாதகமாக இருக்கிறார் என்று.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+