காலம் வேகமாக சுழலுது பாருங்க! ஈரானை சமாளிக்க முடியல! உலக நாடுகளிடம் உதவி கேட்டு நிற்கும் இஸ்ரேல்
டெஹ்ரான்: ஈரான் அனுப்பிய நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்களையும், ஏவுகணைகளையும் இடைமறித்து அழிக்க இஸ்ரேல் சர்வதேச நாடுகளின் உதவியை நாடியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியுள்ளது.

இஸ்ரேலின் பல அடுக்கு பாதுகாப்பு
இஸ்ரேல் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளான அயர்ன் டோம், டேவிட்ஸ் ஸ்லிங் மற்றும் ஆரோவ் போன்ற பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புகளை இயக்கியுள்ளது. ஆனால் இதெல்லாம் கிட்டத்தட்ட தோல்வியில் முடிந்து உள்ளது.
இஸ்ரேல் விமானப்படை நடத்திய குண்டுவீச்சுக்கு பதிலடியாக, நேற்று இரவு இஸ்ரேல் மீது ஈரான் 4-வது கட்டமாக பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. இதில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியுள்ளது.
ஈரான் - இஸ்ரேல் இடையே போர் முற்றி உள்ளது. இந்த போரின் ஒரு பகுதியாக நேற்று இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியது. கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் கடுமையாக சேதம் அடைந்து உள்ளது.
உதவி கேட்ட இஸ்ரேல்
இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரான் அனுப்பிய நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்களையும், ஏவுகணைகளையும் இடைமறித்து அழிக்க இஸ்ரேல் சர்வதேச நாடுகளின் உதவியை நாடியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜோர்டான் போன்ற நட்பு நாடுகளிடம் இஸ்ரேல் உதவி கோரியது.
அமெரிக்க ராணுவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள தனது தளங்களில் இருந்து ஏவுகணைகளை செலுத்தியும், அருகில் இருந்த கப்பல்களை பயன்படுத்தியும் இஸ்ரேலுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அமெரிக்கா நேரடியாக இந்த போரில் தலையிடவில்லை. ஆனால் அமெரிக்கா தங்களுக்கு உதவ வேண்டும் என்று இஸ்ரேல் கோரிக்கை விடுத்து வருகிறது.
நேரடியாக உதவி கேட்ட இஸ்ரேல்
ஈரான் மீதான தாக்குதலில், முக்கியமாக ஈரானின் அணு மையங்கள் மீதான தாக்குதலில் அமெரிக்கா தங்களுக்கு உதவ வேண்டும் என்று இஸ்ரேல் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவை அதிகாரபூர்வமாக போருக்கு அழைத்து உள்ளது இஸ்ரேல்.
ஈரானின் ஃபோர்டோவ் யுரேனியம் செறிவூட்டும் தளத்தை அழிக்க இஸ்ரேலிம் திட்டமிட்டு வருகிறது. ஆனால் இஸ்ரேலிடம் போதுமான பதுங்கு குழி தகர்ப்பு வெடிகுண்டுகளோ அல்லது பெரிய குண்டுவீச்சு விமானங்களோ இல்லை. ஃபோர்டோவ் தளம் மலையின் கீழ் ஆழமாக கட்டப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவிடம் ஈரானுக்கு பறந்து சென்று தாக்கக்கூடிய விமானங்கள் மற்றும் வெடிகுண்டுகள் உள்ளன.
டிரம்ப் நிர்வாகம் இஸ்ரேலின் நடவடிக்கையிலிருந்து இதுவரை விலகியே உள்ளது. இஸ்ரேலின் தாக்குதலை ஆதரித்தாலும்.. நாங்கள் இந்த தாக்குதலுக்கு உதவவில்லை என்றே அமெரிக்கா கூறி வருகிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதலில் அமெரிக்காவின் ஈடுபாடு அல்லது உதவி எதுவும் இல்லை என்று அமெரிக்கா உறுதியாக கூறி உள்ளது.
ஜோர்டான் தனது வான்வெளியை இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க போர் விமானங்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேல் உதவி கேட்டு உள்ளது. மேலும், தனது எல்லைக்கு அச்சுறுத்தலாக இருந்த ஈரானின் ஆளில்லா விமானங்களையும் சுட்டு வீழ்த்த வேண்டும் என்று கேட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் படைகளும் ராணுவ தளங்களில் இருந்து உதவி வழங்க வேண்டும் என்று இஸ்ரேல் கேட்டு உள்ளது .
ஏன் இந்த உதவி?
ஈரான் நடத்திய தாக்குதலின் அளவு மற்றும் சிக்கலான தன்மை காரணமாக, இஸ்ரேல் முடங்கி உள்ளது. ஈரான் ராணுவ ரீதியாக வலிமையான நாடு. இஸ்ரேல் போன்ற சின்ன நாடால்.. அது எந்த ஒரு நாடாக இருந்தாலும் தனியாக சமாளிப்பது கடினம். ஒருங்கிணைந்த முறையில் செயல்பட்டால் மட்டுமே அச்சுறுத்தல்களை தடுக்க முடியும். மற்ற நாட்டின் உதவி இருந்தால் மட்டுமே ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேல் வான்வெளியை அடைவதற்கு முன்பே செயலிழக்கச் செய்ய முடியும்.
ஈரான் நடத்திய தாக்குதலின் தீவிரத்தை உணர்ந்த இஸ்ரேல், நட்பு நாடுகளின் உதவியுடன் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
-
குவைத் நாட்டில் ஈரானின் வெறியாட்டம்! விமான சேவை மொத்தமாக முடக்கம்.. ஜோர்டானில் மட்டும் 12 ஏவுகணைகள் -
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர்












Click it and Unblock the Notifications