ஆமா அது என்ன State Of War? என்ன நடக்கும்? இஸ்ரேல் அதிரடி அறிவிப்பின் காரணம் இதுதான்!
இஸ்ரேல்: இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே இன்று மோதல் உச்சம் பெற்றுள்ளது. காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் உள்ளே ஏவுகணை தாக்குதல்களை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் இஸ்ரேல் ‛ஸ்டேப் ஆப் வார்' என அறிவித்து பாலஸ்தீனத்துக்கு பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. இத்தகைய சூழலில் தான் ‛ஸ்டேட் ஆப் வார்' என்றால் என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாகவே மோதல் உள்ளது. காசா பகுதியில் இருதரப்புக்கும் மோதல் நிலவி வருகிறது. இதனை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் கூட இன்னும் பலன் அளிக்கவில்லை.

காசா பகுதி யாருக்கு சொந்தம் என்பது தான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும். தொடர்ந்து காசா பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர்.
அதிகாலை முதல் 5000க்கும் அதிகமான ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் ஹமாஸ் பயங்கரவாதிகள் நாட்டில் ஊடுருவியதாகவும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இருதரப்புக்கும் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 1970ம் ஆண்டுக்கு பிறகு நடக்கும் போர்கள் என்பது உள்நாட்டு உரிமையை பாதுகாப்பதற்கான போராகவே உள்ளது. அதாவது நாட்டின் உரிமைக்காவும், பாதுகாப்புக்காகவும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் ஆயுதங்கள் ஏந்தி எதிரி நாடுகளுடன் மோதலில் ஈடுபடுவதை தான் நாம் போர் என குறிப்பிடுகிறோம்.
இத்தகைய சூழலில் தான் பாலஸ்தீனத்தின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் ‛ஸ்டேட் ஆப் வார்' என அறிவித்துள்ளது. இது பொதுவாக நாட்டின் உச்ச அதிகாரம் பெற்ற ஒருவரால் அறிவிக்கப்படும். அதன்படி இஸ்ரேல் நாட்டின் தலைமை அதிகாரம் பெற்றவர் ‛ஸ்டேட் ஆப் வார்' என அறிவித்துள்ளார். இந்நிலையில் தான் ‛ஸ்டேட் ஆப் வார்' என்றால் என்ன? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
அதாவது ‛ஸ்டேட் ஆப் வார்' என்பது போரின் ஒருபகுதியாகும். அதாவது நாட்டை காக்க அறிவிக்கப்படும் ஒரு வகையான அறிவிப்பு தான் ‛ஸ்டேட் ஆப் வார்'. ஸ்டேட் ஆப் வார் என அறிவிக்கப்பட்ட பிறகு அந்த நாட்டு அரசு சார்பில் ராணுவத்தை அணியாக திரட்டி சண்டையிடும்.
மேலும் ஆயுதப்படைகளில் மக்களை இணைத்து போரிட வைக்கும். உணவு, பிற அடிப்படை தேவைகளை மக்களுக்கு வழங்கும். மேலும், ஊரடங்கு சட்டம், பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல், ஊடகங்களை கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவை நடைமுறையில் அமலுக்கு கொண்டு வரப்படும். இந்த நடவடிக்கைகளை கொண்டு வருவது தான் ‛ஸ்டேட் ஆப் வார்'.
இதன்மூலம் பாலஸ்தீனத்துக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் முழுவீச்சில் தயாராகி உள்ளது. மேலும் ‛ஸ்டேட் ஆப் வார்' என்பது அறிவிக்கப்பட்டால் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படும். இருதரப்புக்கும் இடையே அமைதிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ராணுவம், மக்கள் இணைந்து எதிரிகளை நோக்கி தாக்குதல் நடத்துவதற்கான துவக்க புள்ளி தான் இந்த ‛ஸ்டேட் ஆப் வார்' ஆகும்.
மேலும் இந்த வேளையில் மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. போர் காலத்தில் மக்கள் பலியாகலாம். மேலும் படுகாயம் அடையலாம். அதோடு கூட்டம் கூட்டமாக வேறு இடத்துக்கு இடம்பெயரும் சூழல் இருக்கும். இதுதவிர பொருளாதார நிலையும் முற்றிலுமாக சீர்க்குலைய வாய்ப்புள்ளது.
பொதுவாக போர் என்பது ஒரு அறிவுசார்ந்த விஷயம் அல்ல. அதோடு அது தீவிரமான பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் போரை அறிவிப்பதற்கு முன்பு அதனால் ஏற்படும் தாக்கத்தை பற்றிய புரிதல் அவசியம். இல்லாவிட்டால் குறிப்பட்ட அந்த நாட்டின் நிலைமை மோசமானதாக மாறிவிடும். பொதுவாக போரை 2 வகைகளாக பிரிக்கலாம்.
முதல் விஷயம் என்பது ‛மொத்த போர்' (Total War). 2வது விஷயம் ‛வரையறைக்குப்பட்ட போர்' (Limited War). ஒரு போரில் இரு தரப்பினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது மற்றும் போர் நடைமுறைகளை மீறி செயல்படுவது என்பது மொத்த போர் என அழைக்கப்படும். மாறாக வரையறுக்கப்பட்ட போர் என்பது இரு நாடுகள் இடையேயான நேரடியாக மோதல் ஏற்படாது. இதில் பதற்ற சூழல் மட்டுமே இருக்கும். அதன்பிறகு போரை நிறுத்தும் வழிமுறைகள் மூலம் போர் என்பது கட்டுக்குள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது வரை மொத்தம் 5 பெரிய போர்கள் நடந்துள்ளன. அதாவது முதலாம் உலகப் போர் (1914-1918), இரண்டாம் உலகப் போர் (1939-1945), வியட்நாம் போர் (1954-1975), வளைகுடா போர் (1990-1991), ஈராக் போர் (2003-2011) உள்ளிட்டவற்றை நாம் கூறலாம். தற்போதும் உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நடந்து வருகிறது. இது ஓராண்டை கடந்தும் தொடர்ந்து வருகிறது.
அதேநேரத்தில் சில நேரங்களில் போர் அறிவிக்கப்பட்டாலும் கூட சண்டைகள் நடைபெறாமல் இருக்கும். இதன் பின்னணி என்னவென்றால் அரசியல், குறிப்பிட்ட நோக்கத்தை (strategic Reason)நிறைவேற்றுவதற்கான காரணங்கள் தான். இந்த வேளையில் மக்கள் பெரும்பாலும் பாதிக்கப்படாமல் இருந்தாலும் கூட பதற்றம் இருக்கும். ஆனால் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் இந்த நிலைமையை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications