"போருக்கு ரெடி.." திருப்பி அடிக்க ரெடியாகும் இஸ்ரேல்! சர்வதேச அளவில் உருவாகும் அடுத்த மெகா பிரச்சினை

Subscribe to Oneindia Tamil

இஸ்ரேல்: ஹமாஸ் படையினர் அதிகாலையில் நடத்திய ஏவுகணை தாக்குதல் நடத்திய, போருக்கு ரெடியாக உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் தொடர்ந்து வருகிறது. காசா பகுதியை தங்களுக்குச் சொந்தமானது என்று இஸ்ரேல் கூறும் நிலையில், மறுபுறம் பாலஸ்தீனும் இது தங்களுடையது என உரிமை கோருகிறது.

 Israel says it is Ready For War after Palestines Hamas Launches 5,000 Rockets From Gaza

இதனால் இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. இந்த பிரச்சினையைத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அப்பகுதியில் அமைதி திரும்பவில்லை. தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

மீண்டும் தாக்குதல்: இதற்கிடையே இன்று காலை யாரும் எதிர்பார்க்காத வகையில் பாலஸ்தீன் போராளிகள் இஸ்ரேல் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் திடீர் தாக்குதலை நடத்தினர். அவர்கள் இஸ்ரேலை நோக்கி குண்டு மழை பொழிந்துள்ளனர். வெறும் 20 நிமிடங்களில் சுமார் 5000 ஏவுகணைகள் இஸ்ரேல் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை நோக்கிப் பாய்ந்துள்ளது. இது மட்டுமின்றி ஆயுதமேந்திய ஹமாஸ் படைகள் பல இடங்களில் இஸ்ரேலிய எல்லைக்குள் ஊடுருவி உள்ளதாகவும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டு நேரப்படி காலை 6.30 தொடங்கிய இந்த ஏவுகணை தாக்குதல் தொடர்ந்து பல மணி நேரம் நீட்டித்துள்ளது. இன்று காலை எந்தவொரு எச்சரிக்கையும் இல்லாமல் திடீரென ஹமாஸ் படைகள் இந்த தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். இஸ்ரேல் நாட்டில் யூத சப்பாத் காரணமாக இன்று விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், காலையிலேயே இந்த கொடூர தாக்குதல் அரங்கேறியுள்ளது.

போருக்கு ரெடி: இதற்கிடையே இந்த தாக்குதலுக்குப் பதிலடி தரும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்த தகவல்கள் கிடைத்தவுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை நடைபெற்றுள்ளது. அதில் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு, பதிலடி கொடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இஸ்ரேலின் ஜெருசலேமில் சைரன்கள் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தாங்கள் போருக்கு ரெடியாக உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், ஹமாஸ் படையினருக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

பரபரப்பு: இஸ்ரேல் நாட்டில் அதிகாலையில் நடந்த இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் தெற்கு மற்றும் மத்திய இஸ்ரேல் பகுதிகளில் வானம் முழுக்க புகை மூட்டமாக இருக்கிறது. மேலும், பொதுமக்கள் பதுங்கு குழிகளை நோக்கி ஓட்டுகின்றனர். இந்தத் தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது குறித்த இறுதி தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளது ஆரம்பக்கட்ட தகவல்களில் தெரிகிறது.

இது மட்டுமின்றி இஸ்ரேலிய எல்லைக்குள் ஹமாஸ் படையினர் ஊடுருவி உள்ளதாக இஸ்ரேல் படைகள் எச்சரித்துள்ளனர். அந்த ஹமாஸ் படையினரிடம் கனரகத் துப்பாக்கிகள், மினி ராக்கெட் லான்சர்களும் இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், அவர்கள் கார்கள் மற்றும் வீடுகள் என்று கண்ணில் படும் அனைத்தையும் நோக்கி தாறுமாறாகத் துப்பாக்கிச் சூடுகளை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+