"பெரிதாகும் போர்.." நள்ளிரவில் காசாவுக்குள் இறங்கிய இஸ்ரேல் பீரங்கிகள்.. அடுத்த நொடி நடந்த பகீர்!

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே மோதல் தொடரும் நிலையில், நள்ளிரவில் காசாவுக்குள் இறங்கிய இஸ்ரேல் படை நடத்திய தாக்குதல் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் கடந்த சில வாரங்களாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கே இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடக்கும் யுத்தம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே போகிறது.

 Israel Tanks Overnight Raid in North Gaza attacks various Targets

ஏற்கனவே காசா மீது முழு வீச்சில் படையெடுப்போம் என இஸ்ரேல் எச்சரித்திருந்தது. உலக நாடுகளின் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் இதுவரை இஸ்ரேல் முழு வீச்சில் படையெடுப்பை ஆரம்பிக்கவில்லை.

இஸ்ரேல் தாக்குதல்: இதற்கிடையே நள்ளிரவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் காசாவுக்கள் ஹமாஸ் பீரங்கிகள் அதிரடியாக உள்ளே நுழைந்துள்ளன. மேலும், அவர்களுடன் இஸ்ரேல் வீரர்களின் ஒரு படையும் காசாவுக்குள் நுழைந்துள்ளது. காசாவுக்குள் பல்வேறு இலக்குகளைக் குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், சில மணி நேரம் கழித்து அவர்கள் மீதும் இஸ்ரேலுக்குத் திரும்பியதாகக் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் முழு வீச்சில் படையெடுப்பிற்கு ரெடியாகி வருவதாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறிய நிலையில், காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் இந்தத் தாக்குதலைத் துல்லியமாகத் தாக்குதல் என விவரித்துள்ளது. காசாவுக்குள் இறங்கியே இஸ்ரேல் பீரங்கிகள் பல பயங்கரவாத செல்கள், உள்கட்டமைப்பு எனப் பல இலக்குகளைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டம்: இது அடுத்த கட்ட போருக்கான ஆயத்த நடவடிக்கையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சில மணி நேரத்தில் தாக்குதலை முடித்துவிட்டு அனைத்து வீரர்களும் பாதுகாப்பாக வெளியேறி இஸ்ரேல் பகுதிக்குத் திரும்பிவிட்டதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. அதில் பீரங்கி உள்ளிட்ட அதிநவீன ராணுவ வாகனங்கள் காசா பகுதிக்குள் நுழைவது தெளிவாகத் தெரிகிறது.

இந்த வீடியோ தெற்கு இஸ்ரேலின் அஷ்கெலோன் நகரில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், மற்றொரு வீடியோவையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. அதில் வான்வழித் தாக்குதல், கட்டிடங்கள் ஏவுகணைகளால் தாக்கப்படுவது, புகை மண்டலம் சூழ்ந்த பகுதிகள் ஆகியவை வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

பின்னணி: இஸ்ரேல் மீது கடந்த அக். 7ஆம் தேதி ஹமாஸ் மிகவும் கொடூரமான ஒரு தாக்குதலை அரங்கேறியது.. இஸ்ரேலுக்குள் வந்த காசா படை சரமாரியாகத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது.. இதில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 1,400 பேர் கொல்லப்பட்டனர்.. பல நூறு பேர் படுகாயமடைந்தனர்.. மேலும், இஸ்ரேலுக்கு வந்த ஹமாஸ் படை 200க்கும் மேற்பட்டோரையும் கடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலை இஸ்ரேல் துளியும் எதிர்பார்க்கவில்லை. முதலில் சற்று திணறினாலும் கூட அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல், இதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியது. காசா மீது சரமாரியாகக் குண்டு மழை பொழிந்தது. இதில் 6,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் காசா தரப்பில் கூறப்பட்டுள்ளது. இப்படி அங்கே பதற்றமான சூழலே நிலவுகிறது.

மேலும், இஸ்ரேல் தாக்குதலுக்குக் காரணமான அனைவரையும் வேட்டையாடுவோம் என்று இஸ்ரேல் கூறியுள்ள நிலையில், இதற்காகத் தனியாக ஒரு ஸ்பெஷல் கமேண்டோ படையையும் இறக்கியுள்ளது. வரும் நாட்களில் போர் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+