சுற்றி வளைத்த இஸ்ரேல்! திடீரென இருளில் மூழ்கிய காசா! நள்ளிரவில் திக்திக்! 6வது நாளாக தொடரும் யுத்தம்
டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் ஆறாவது நாளாகப் போர் தொடரும் நிலையில், அங்கு உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் மீது காசாவில் இருக்கும் ஹமாஸ் படை கடந்த சனிக்கிழமை யாருமே எதிர்பார்க்காத வகையில் தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடங்களில் 5000+ ஏவுகணைகளை வீசிய இஸ்ரேல் மோசமான தாக்குதலை நடத்தியது.

அதைத் தொடர்ந்து பாராசூட் மூலம் இஸ்ரேல் நாட்டில் இறங்கிய ஹமாஸ் படை சரமாரியாகத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. அவர்கள் அப்பாவி பொதுமக்களையும் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
இந்தத் தாக்குதலால் முதலில் இஸ்ரேல் ஸ்தம்பித்துப் போய்விட்டது. இருப்பினும், சில நாட்களில் சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல் பதிலடி கொடுக்க தொடங்கியது. முதலில் காசா பகுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்திய இஸ்ரேல், அதைத் தொடர்ந்து இப்போது தரைவழி தாக்குதலையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த போர் காரணமாகப் பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் படை நடத்திய திடீர் தாக்குதலால் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 1200 பேர் உயிரிழந்தனர். இதில் பலர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஆகும். அதேபோல காசா பகுதியிலும் 1100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.
இதற்கிடையே காசா பகுதியை இப்போது இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. காசா பகுதியில் மின்சாரத்தை முடக்கும் வேலைகளிலும் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே பாலஸ்தீனப் பகுதியில் அமைந்துள்ள ஒரேயொரு மின்நிலையமும் முடங்கியதாகத் தகவல் வெளியானது. இதனால் காசா நேற்று மின்சாரம் இல்லாமல் முடங்கியுள்ளதாக ஹமாஸ் படைகள் தெரிவித்துள்ளது.
காசா பகுதியை முற்றுகையிட்ட இஸ்ரேல், அங்கே உணவு மற்றும் எரிபொருட்களுக்குத் தடை விதித்த 2ஆவது நாள் இந்த மின்தடை ஏற்பட்டுள்ளது. காசா பகுதியில் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மின்சாரம், உணவு, எரிபொருள் என அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் காசா பகுதிக்கான மின்சார விநியோகத்தை நிறுத்தியதால் காசாவில் முழு மின்தடை ஏற்பட்டுள்ளது.
-
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications