பிஞ்சுக் குழந்தைகள் உட்பட.. காசா, லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொத்துக் கொத்தாக பலி!

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: காசாவின் மத்திய கிழக்கில் உள்ள ஜபாலியா நகரத்தில் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 13 குழந்தைகள், 9 பெண்கள் உட்பட 33 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து பாலஸ்தீன நாட்டை சேர்ந்த ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். பலர் பணையக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக ஹமாஸ் மீது போரை தொடங்கியது இஸ்ரேல். இருதரப்பிலும் மாறி மாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

hamas israel palestine


காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய அதிரடி ஆபரேஷனில் ஹமாஸ் படையைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை வேரோடு அழிக்கும் வரை ஓய மாட்டோம் என்று இஸ்ரேல் திட்டவட்டமாக உள்ளது. ஹமாஸுக்கு ஆதரவாக களமிறங்கிய லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் தாக்குதலை தொடர்ந்து வருகிறது இஸ்ரேல்.

இந்நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பல குழந்தைகள் உட்பட 53 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் சனிக்கிழமை நடந்த தாக்குதலில் 53 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். மீட்கப்பட்ட உடல் பாகங்கள் அடையாளம் காண, டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லெபனானில் கடந்த ஆண்டில் இஸ்ரேல் பல கட்டங்களாக நடத்திய தாக்குதல்களில் 3,186 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் 619 பெண்கள் மற்றும் 194 குழந்தைகள் அடங்குவர். 13,979 பேர் காயம் அடைந்துள்ளனர் என லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், வடக்கு காசாவின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 33 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவின் மத்திய கிழக்கில் உள்ள ஜபாலியா நகரத்தில் இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதன்படி இன்று நடத்திய தாக்குதலில் 13 குழந்தைகள், 9 பெண்கள் உட்பட 33 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+