For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.டி ஊழியர்களை குஷிப்படுத்த “சியர் லீடர்கள்” - கலகலப்பிற்கு உத்திரவாதம் தரும் சீனா!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் சியர் லீடர்களை அறிமுகப்படுத்தி ஆண் ஊழியர்களிடையே கலகலப்பைக் கொண்டு வந்துள்ளனராம் அங்குள்ள ஐடி நிறுவனங்கள்.

இந்த சியர் லீடர்களும் சாப்ட்வேர் என்ஜீனியர்கள், டெலவப்பர்கள்தான். ஆனால் சியர் லீடர்களாக இவர்கள் செயல்படுவார்கள்.

IT Firms In China Hire Female Cheerleaders To Motivate Male Employees

ஆண் ஊழியர்களிடம் போய் அடிக்கடி பேசி அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களை திறமையாக வேலை செய்ய உதவுவார்களாம். அவர்களுடன் பேசுவது மட்டுமல்லாமல், அவர்களுடன் விளையாடுவது (games) போன்றவற்றிலும் ஈடுபட்டு அவர்களை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறார்களாம்.

புத்துணர்ச்சியுடன் வேலை:

சியர் லீடர்கள் மூலமாக ஆண் ஊழியர்கள் எப்போதும் புத்துணர்ச்சியோடு வேலை பார்க்கிறார்களாம். உற்பத்தித் திறனும் அதிகரிக்கிறதாம்.

லீவுக்கு டாட்டா:

சியர் லீடர்கள் இருப்பதால் அடிக்கடி லீவு போடாமல் ஊழியர்கள் வேலைக்கு வர ஆர்வம் காட்டுகிறார்களாம். உம்மென்று வேலை பார்க்காமல் பேசிக் கொண்டே வேலை செய்வதற்கு சியர் லீடர்கள் உதவியாக இருப்பதாக ஆண் ஊழியர்கள் கூறுகிறார்கள்.

ஆண்கள் முகத்தையே பார்க்க முடியாதே:

இதுகுறித்து ஒரு இன்டர்நெட் நிறுவனத்தின் ஹெச்ஆர் மேனேஜர் கூறுகையில், எங்களது நிறுவனத்தில் 3 சியர் லீடர்கள் உள்லனர். எங்களது நிறுவனத்தில் பெரும்பாலும் ஆண்களே பணியாற்றுவதால் சியர் லீடர்கள் தேவைப்பட்டார்கள் என்றார்.

உற்பத்தி திறன் அதிகரிப்பு:

இப்படி சியர் லீடர்களைப் போட்டதால் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளதாம். ஊழியர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக புத்துணர்ச்சியோடு வேலை பார்க்கிறார்களாம்.

தரக்குறைவான செயல்:

ஆனால் இந்த சியர் லீடர்கள் நியமனத்திற்கு எதிர்ப்புகளும் இருக்கத்தான் செய்கிறது. இது பாலியல் ரீதியாக பெண்களை குறைத்து மதிப்பிடும் செயல். தரக்குறைவானது என்று பலர் கூறி வருகின்றனர்.

கீழ்த்தரமான விஷயம்:

ஒருவரது திறமையை அவரை தட்டிக் கொடுத்தும், ஊக்குவித்தும்தான் வெளிக் கொண்டு வர வேண்டுமே தவிர இப்படி பாலியல் ஆர்வத்தைத் தூண்டி விட்டு கொண்டு வருவது கீழ்த்தரமானது என்றும் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

English summary
To break the monotonous routine in the office, IT companies have deployed cheerleaders who also happen to be programmers and are talented.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X