இது முடியவில்லை டிரம்ப்.. அப்பாவின் இறுதி ஊர்வலத்தில் சபதம் எடுத்த சுலைமானி மகள்.. கடும் எச்சரிக்கை!
என் அப்பாவை கொன்றுவிட்டதால் எல்லாம் முடியவில்லை, அமெரிக்காவை ஈரான் மோசமாக தாக்கும் என்று சுலைமானி மகள் செய்னப் சுலைமானி தனது அப்பாவின் மரணம் குறித்து பேட்டி அளித்துள்ளார்
Recommended Video
டெஹ்ரான்: என் அப்பாவை கொன்றுவிட்டதால் எல்லாம் முடியவில்லை, அமெரிக்காவை ஈரான் மோசமாக தாக்கும் என்று சுலைமானி மகள் செய்னப் சுலைமானி தனது அப்பாவின் மரணம் குறித்து பேட்டி அளித்துள்ளார்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் கடந்த வாரம் டிரோன் விமானம் மூலம் நடத்தியது. ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி அந்நாட்டை மொத்தமாக கட்டுப்படுத்தி வந்தவர். அந்நாட்டிலேயே அதிக சக்தி வாய்ந்த நபர் இவர்தான். ஈரானில் முக்கிய முடிவுகளை எடுக்க கூடிய ராணுவ தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முதல் நாள் இவரின் இறுதி ஊர்வலம் நடந்தது.

என்ன பேட்டி
இந்த நிலையில் சுலைமானி மகள் செய்னப் சுலைமானி தனது அப்பாவின் மரணம் குறித்து பேட்டி அளித்துள்ளார். அப்பாவின் இறுதி ஊர்வலம் முடிந்த பின் பேசிய செய்னப் சுலைமானி, என் அப்பாவை கொன்றுவிட்டார்கள். அவருக்கு எவ்வளவு மக்கள் ஆதரவு இருந்தது என்று இந்த கூட்டத்தை பார்த்தால் உங்களுக்கு தெரியும்.

சுலைமானி மகள் செய்னப்
வெறிபிடித்த டிரம்ப்தான் இப்படி செய்தது. எல்லாம் முடிந்துவிட்டது. என் அப்பாவை கொன்றால் கதை முடிந்தது என்று அவர் நினைக்கிறார். ஆனால் டிரம்ப் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். எதுவும் முடியவில்லை.

பதிலடி
இதுதான் தொடக்கம். அமெரிக்கா மீது ஈரான் மிக கடுமையான தாக்குதல் நடத்தும். டிரம்பை இதற்காக பழி வாங்காமல் ஈரான் விடாது. ஈரானின் முழு பலத்தை அமெரிக்கா தெரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை.

வெறும் தொடக்கம்
அமெரிக்க குடும்பங்கள் வருத்தப்படும். ஈராக்கில் இருக்கும் தங்கள் குடும்பத்தை சேர்ந்த அமெரிக்க ராணுவ வீரர்களை அவர்கள் இனி பார்க்க முடியாது. அவர்களின் குடும்பம், ராணுவ வீரர்களின் மரணத்தை மட்டும்தான் பார்க்க போகிறது என்று செய்னப் சுலைமானி குறிப்பிட்டுள்ளார்.
-
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
அடுத்தடுத்து நிலநடுக்கம்.. காலையிலேயே குலுங்கிய ஈரான்.. கியூபாவில் 150 ஆண்டுகளில் இல்லாத அதிர்வு -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
B1/B2 Visa: காசு கொடுத்த 10 நாளில் அமெரிக்கா செல்ல விசா.. ப்ரீமியம் சேவையாம்! -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
ஹார்முஸ், பாப் அல்-மண்டெப் இரண்டையும் மூடிய ஈரான்..? மொத்த வர்த்தகமும் முடக்கம்.. உலக நாடுகள் ஷாக் -
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு! -
இஸ்ரேல் கப்பலை கண்டதும் சுட உத்தரவு.. பாப் அல்-மன்டெப் கண்ட்ரோலில் எடுக்கும் ஹவுதி!











Click it and Unblock the Notifications