"3ஆம் உலக போர் தொடங்கலாம்! ரியல் ஆபத்து அதில்தான்.." எச்சரிக்கும் ரஷ்ய அமைச்சர்.. முழு பின்னணி
மாஸ்கோ: உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடையத் தொடங்கி உள்ள நிலையில், மூன்றாம் உலகப் போர் தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறிய கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் பெரியளவில் உடன்பாடு ஏற்படாத நிலையில், சில வாரங்களுக்கு முன் நடந்த பேச்சுவார்த்தையில் பல விவகாரங்களில் உடன்பாடு ஏற்பட்டது.
இதனால் போர் விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு நேர் மாறாகப் போர் மீண்டும் தீவிரமடைய தொடங்கி உள்ளது. உக்ரைன் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.

உக்ரைன் போர்
உக்ரைன் மோதல் மூன்றாம் உலகப் போராக மாறும் அபாயம் உள்ளதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் எச்சரிக்கை விடுத்தார். இந்த போர் தொடங்கியது முதல் ரஷ்யப் படைகளைச் சமாளிக்க உதவும் வகையில், அமெரிக்கா தொடங்கி பல்வேறு மேற்குல நாடுகளும் உக்ரைனுக்கு தொடர்ந்து ராணுவ ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதனால் அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி நடக்கும் சண்டையாக உக்ரைன் போர் மாறி உள்ளது.

3ஆம் உலகப் போர்
இந்நிலையில், ரஷ்யச் செய்தி நிறுவனங்களிடம் பேசிய அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், "அமைதிப் பேச்சுவார்த்தைகளைக் குழப்பம் வகையில் உக்ரைன் தரப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது மூன்றாம் உலகப் போரைத் தொடங்கும் ஆபத்து உள்ளது. இது உண்மையான ஆபத்து. 3ஆம் உலகப் போர் ஏற்படும் ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. அதை நீங்கள் அதைக் குறைத்து மதிப்பிட முடியாது.

ஆயிரம் முரண்பாடுகள்
பல பின்னடைவுகள் இருந்த போதிலும், உக்ரைன் உடனான பேச்சுவார்த்தை தொடரவே செய்யும். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்துவது போலப் பாசாங்கு செய்கிறார். அவர் பேசுவதைக் கொஞ்ச நேரம் கேட்டாளே அதில் ஆயிரம் முரண்பாடுகளை நீங்கள் காண்பீர்கள்" என்றும் அவர் தெரிவித்தார். உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடையத் தொடங்கி உள்ள நிலையில், ரஷ்ய அமைச்சரின் இந்தப் பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மேற்கத்திய நாடுகளிடம் கனரக ஆயுதங்களைத் தேவை என்று தொடர்ந்து கேட்டு வருகிறார். மேற்குலக நாடுகள் தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே அளித்து வருவதாகவும் ரஷ்யா ராணுவத்தைச் சமாளிக்கத் தாக்குதல் நடத்தக் கூடிய ஆயுதங்கள் தேவை என்றும் ஜெலனஸ்கி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். நேட்டோ உள்ளிட்ட உலக நாடுகள் தங்களிடம் இருக்கும் ஆயுதங்களில் ஒரு சதவிகிதத்தை அளித்தால் கூட ரஷ்யா ராணுவத்தைச் சமாளிக்க முடியும் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்,

உலக தலைவர்கள்
கடந்த சில வாரங்களாகவே உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு உலக தலைவர்கள் தொடர்ந்து விசிட் அடித்து வருகின்றனர். முதலில் பிரிட்டன் அதிபர் போரிஸ் ஜான்சன் அங்குச் சென்று திரும்பிய நிலையில், சில நாட்களுக்கு முன்பு தான் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் மற்றும் வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் கீவ் சென்று ஜெலன்ஸ்கியை சந்தித்தனர். சரியான ஆயுதங்கள் இருந்தால் நிச்சயம் போரில் வெல்ல முடியும் என்றும் அவர் அமெரிக்கத் தலைவர்கள் கூறி இருந்தனர்.

ரஷ்யா தாக்குதல்
அதேநேரம் மறுபுறம் ரஷ்யாவும் தனது தாக்குதலைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. ரஷ்ய விமானப்படை நடத்திய தாக்குதலில் நான்கு கட்டளை மையங்கள், இரண்டு எரிபொருள் கிடங்குகள் உட்பட 82 இராணுவ தளங்கள் அழிக்கப்பட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications