மவுனம் கலைந்தது! 30 ஆண்டுகளுக்கு பின் பிறந்த குழந்தை.. இந்த ஊரில் மட்டும் குழந்தையே பிறக்காமல் இருந்தது ஏன்

Subscribe to Oneindia Tamil

ரோம்: இத்தாலியில் உள்ள பாக்லியாரா டெய் மார்சி என்ற கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஒரு குழந்தை பிறந்துள்ளது. அங்கு 30 ஆண்டுகளாக ஏன் குழந்தை பிறப்பே இல்லை.. இதற்கு என்ன காரணம்.. இப்போது பிறந்த குழந்தையை ஏன் ஊரே சேர்ந்து கொண்டாடுகிறது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

இந்த நூற்றாண்டில் உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்கள் தொகை சரிவே மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. மக்கள் தொகை சரிவு தொடர்வதால் எதிர்காலத்தில் பல உலக நாடுகள் மாயமாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மக்கள்தொகையை மீட்டெடுக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும் கூட அதற்குப் பெரியளவில் பலன் கிடைப்பதில்லை. இதனால் உலகெங்கும் பல ஊர்கள் மெல்ல அழிந்து வருகின்றன.

Italian Village Pagliara dei Marsi Welcomes First Baby in Nearly 30 Years Amid Demographic Crisis
Photo Credit:

இத்தாலி

அப்படி அழிந்து வரும் ஊர்களில் ஒன்று இத்தாலியின் அப்ருஸ்ஸோ பகுதியில் அமைந்துள்ள பாக்லியாரா டெய் மார்சி என்ற கிராமம்.. இந்த சிறு கிராமத்தில் மொத்தமே 19 பேர் தான் வசிக்கிறார்கள். இங்கு மனிதர்களைவிடப் பூனைகள் அதிகமாக வாழ்கின்றன. மனிதர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதால், கிராமத்தின் வீதிகளையும் வீடுகளையும் பூனைகள் ஆக்கிரமித்துக் கொண்டன.

அங்கு குழந்தை பிறப்பு என்பதே இல்லாமல் போய் இருந்தது. அதுவும் ஏதோ ஓரிரு ஆண்டுகள் இல்லை. கடந்த 30 ஆண்டுகளாகவே குழந்தையின் அழுகுரல் கூட அங்கு கேட்கவில்லை. இந்தச் சூழலில் தான் கடந்த மார்ச் மாதம் அங்குச் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாகக் குழந்தை பிறந்தது. இதனை அந்த கிராமமே ஒரு திருவிழா போல கொண்டாடினர்.

முதல் குழந்தை

அந்த குழந்தைக்கு லாரா பஸ்ஸி ட்ராபுக்கோ (Lara Bussi Trabucco) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இந்த கிராமத்தில் பிறந்த முதல் குழந்தை. இதனால் அங்கு மக்கள்தொகை 20ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை சரிவால் எங்குக் கிராமமே அழிந்துவிடுமே என்று மக்கள் அஞ்சிக் கொண்டு இருந்த நிலையில், பஸ்ஸியின் வருகை அந்த ஊர் மக்களுக்கு நம்பிக்கையைத் தருவதாக இருக்கிறது. அதைக் கொண்டாடும் வகையில் தேவாலயத்தில் சிறப்புப் பிரார்த்தனை தொடங்கி ஏகப்பட்ட சிறப்பு விழாக்களை நடத்தியுள்ளனர்.

ஊக்கத்தொகை

மேலும், குழந்தையைப் பெற்றெடுத்ததற்காக அவர்களின் பெற்றோர்களுக்கு 1,000 யூரோ, அதாவது சுமார் ஒரு லட்ச ரூபாய் 'குழந்தைப் போனஸ்' வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் மக்கள்தொகை மோசமாக இருக்கும் நிலையில், அங்குப் பிறக்கும் அல்லது தத்தெடுக்கப்படும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1000 யூரோ வழங்கப்படுகிறது. அதன்படியே இந்த தம்பதிக்கு ஊக்க தொகை தரப்பட்டுள்ளது. இது தவிரப் பராமரிப்புக்கு மாதம் சுமார் 370 யூரோ, அதாவது சுமார் ரூ.40,000 வழங்கப்படும்.

இது தொடர்பாக அவர் தாய் சின்சியா கூறுகையில், "எங்கள் மகளுக்கு இப்போது 9 மாதங்கள் தான் ஆகிறது. ஆனால், அதற்குள் இங்குப் பிரபலமான நபராகிவிட்டார். எங்கள் ஊறை பற்றித் தெரியாதவர்கள் கூட பஸ்ஸி பற்றித் தெரிந்தவுடன் அவரை பார்க்கவருகிறார்கள்" என்கிறார் மகிழ்ச்சியுடன்!

மக்கள்தொகை நெருக்கடி

இது இத்தாலியில் அதிகரித்து வரும் மக்கள்தொகை நெருக்கடியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 2025ல் இத்தாலியில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 3,69,944 ஆகக் குறைந்துள்ளது. அங்குப் பதிவாகியுள்ள குறைந்தபட்சக் குழந்தை பிறப்பு இதுவாகும். 2024ஆம் ஆண்டில் குழந்தை பெறும் வயதுடைய பெண்களுக்குச் சராசரியாக 1.18 குழந்தைகள் மட்டுமே பிறந்தன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இதுதான் மிகக் குறைவு! இந்த நம்பர் 2.1ஆக இருந்தால் மட்டுமே மக்கள் தொகை குறையாமல் இருக்கும். அது கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது இத்தாலியின் மோசமான சூழலையே காட்டுகிறது.

அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை, குடியேற்றம், குழந்தையை வளர்க்கப் போதிய உதவி கிடைக்காதது எனப் பல்வேறு காரணங்களை இதற்குப் பட்டியலிடுகிறார்கள். இதனால் இளம் வயதில் இருக்கும் பலரும் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டாம் என முடிவு செய்கிறார்கள். இதுவே மக்கள் தொகை சரிவுக்குக் காரணமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+