இத்தாலி கடலில் படகு மூழ்கி விபத்து 140 பேர் பலி?

இத்தாலி கடற்பரப்பில் அகதிகள் படகு மூழ்கி விபத்துக்குள்ளாகியதில் 140 பேர் உயிரிழந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

ரோம்: இத்தாலி லம்பேடுசா தீவு அருகே படகு கடலில் மூழ்கி 140 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த படகில் பயணித்த 2 பேர் மட்டுமே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலிக்கான ஐ.நா.அகதிகள் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

பொருளாதார நெருக்கடி, உள்நாட்டு போர். போன்ற காரணங்களினால் சிரியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாக பாதுகாப்பற்ற பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு, செல்லும்போது அடிக்கடி ஏற்படும் படகு விபத்துகளினால் நூற்றுக்கணக்காக அகதிகள் ஒரே நேரத்தில் உயிரிழக்கும் சோகமான சம்பவம் தொடர்ந்து அங்கு நடைபெற்று வருகின்றது.

தற்போது இத்தாலியின் லம்பேடுசா தீவை அண்மித்த பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட அகதிகள் பயணித்த படகு கடலில் மூழ்கியதில் 100க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இத்தாலி படகு விபத்தின் போது 39 பேர் மட்டுமே தப்பித்து லம்பேடுசா தீவை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, வெள்ளிக்கிழமை காலை இத்தாலி கடற்பரப்பில் மற்றுமொரு படகு விபத்துக்குள்ளாகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+