செளதி அரேபியா இளவரசர் சவூது அல் பைஸல் மறைவுக்கு ஐ.யூ.எம்.எல் தலைவர் அகமது இரங்கல்
டெல்லி: செளதி அரேபியாவின் நீண்ட கால வெளியுறவு அமைச்சரும், இளவரசருமான சவூது அல் பைஸல் மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது எம்.பி., இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் அறிக்கை:

இளவரசர் சவூது அல் பைஸல் மறைவு செளதி அரேபியாவிற்கு பெரிய இழப்பாகும். அவர் நான்கு செளதி அரசர்களின் கீழ் பணியாற்றி செளதியின் வெளியுறவுக் கொள்கையை மேம்படுத்தியவர்.
40 ஆண்டுகள் பணியாற்றிய அவர் மத்திய கிழக்கை பாதிக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முக்கியமான பணியாற்றியவர்.
இந்தியா ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டது. எனக்கும் - அவருக்கும் நீண்ட காலமாக நல்லுறவு நிலவி வந்தது. இந்தியா தொடர்பான பிரச்சனைகளில் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்.

புனித ஹஜ் மற்றும் நிதாகட் போன்ற பிரச்சனைகளில் அவர் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். நிதாகட் திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்பட்ட போது, இந்தியாவினுடைய உணர்வுகளை மதித்து நடந்து செளதி அரசிடம் இந்தியர் நலன்களை பாதுகாத்தவர். அவரது இழப்பு செளதிக்கு மட்டுமல்ல, மத்திய கிழக்குப் பகுதி முழுவதுக்குமே பேரிழப்பாகும்.
இவ்வாறு இ.அஹமது தமது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications