போதைப்பொருள் வழக்கில் வழக்கறிஞர் அனுமதியுடன் முறைப்படி ஜாக்கிசான் மகன் கைது!
பெய்ஜிங்: சீனாவில் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் மகன் நேற்று முறைப்படி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை பொருள் உபயோகிப்பதற்கு மற்றவர்களை அனுமதித்த குற்றத்திற்காக கைதாகியுள்ளார் இவர்.
இவருக்கு அதிகபட்சமாக 3 வருட சிறை தண்டனை வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஜெய்சீ சான்:
கடந்த ஆகஸ்டு 14 ஆம் தேதி சீன அதிகாரிகள் நடத்திய போதை பொருள் தடுப்பு வேட்டையில் ஜெய்சீ சான் மற்றும் தைவான் நாட்டு திரைப்பட நடிகர் கோ கய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தடை செய்யப்பட்ட போதைப்பொருள்:
அவர்கள் இருவருக்கும் நடந்த சோதனையில் மரிஜுவானா பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. அதனுடன் ஜெய்சீ சான் வீட்டில் இருந்து 100 கிராம் அளவு போதை பொருள் கைப்பற்றப்பட்டது.
கைது செய்ய கோரிக்கை:
அடுத்து சில நாட்களில் நடந்த இந்த சோதனையை அடுத்து இருவரையும் முறைப்படி கைது செய்ய வழக்கறிஞர்களிடம் சீன போலீசார் அனுமதி கோரினர்.
வெப்போ தளத்தில் வெளியீடு:
இதற்கு டாங்செங் மாவட்ட வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் இருந்து முறைப்படி கைது செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை சீனா வெய்போ வலைதளத்தில் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
வழக்கறிஞர் ஒப்புதல் அவசியம்:
சீனாவில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை முறைப்படி கைது செய்ய வழக்கறிஞர்களின் ஒப்புதல் போலீசாருக்கு தேவை.
போதைப்பொருள் எதிர்ப்பு:
கடந்த 2009 ஆம் ஆண்டு போதை பொருள் எதிர்ப்பு தூதர் ஆக சீன அதிகாரிகளால் ஜாக்கி சான் அறிவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தன்னுடைய மகனின் செயலுக்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications