ஒரே வாரத்தில் மாபெரும் நிலநடுக்கம் ஜப்பானை தாக்கும்! அதிகாரப்பூர்வ வார்னிங்! இந்தியாவுக்கு ஆபத்து?
டோக்கியோ: ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 2 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், அங்கு ஒரு மாபெரும் பூகம்பம் ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஜப்பான் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டால் சுனாமி ஏற்படும் அபாயம் இருக்கும் நிலையில், ஆய்வாளர்களின் இந்த எச்சரிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
உலகிலேயே மிகவும் அதிகமாக நிலநடுக்கம் ஏற்படும் இடங்களில் ஒன்று ஜப்பான். ரிங் ஆஃப் பையர் என்ற பகுதியில் அமைந்துள்ளதால் ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். இதனால் அங்கு நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையிலேயே கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இருப்பினும், அதையும் தாண்டி பெரிய பூகம்பம் ஏற்படும்போது பேரழிவு ஏற்படுகிறது.

ஜப்பான் நிலநடுக்கம்
இந்தச் சூழலில் தான் ஜப்பானுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் வட கடற்கரைப் பகுதியை அடுத்த ஒரு வாரத்திற்குள் மாபெரும் நிலநடுக்கம் தாக்கக்கூடும் என்று ஜப்பான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. திங்களன்று அங்கு 7.5 ரிக்டரில் முதலில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இப்போது இந்த மாபெரும் நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை வந்துள்ளது.
கடந்த திங்களன்று ஆமோரியின் பசிபிக் பெருங்கடல் கடற்கரையிலிருந்து 54 கி.மீ ஆழத்தில், இரவு 11:15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அதே தீவிரம் அல்லது அதை விடத் தீவிரமான நிலநடுக்கம் அடுத்த ஒரு வாரத்திற்குள் ஏற்படலாம் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் கடந்த 2022ம் ஆண்டு முதல் இதுபோன்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் இந்த எச்சரிக்கை காரணமாகவே ஜப்பானில் நிச்சயம் நிலநடுக்கம் ஏற்படும் என இல்லை. அதற்கான வாய்ப்புகள் சற்று உயர்ந்துள்ளது என்ற முன்னெச்சரிக்கை மட்டுமே!
சுனாமி
திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு இது 60 செ.மீ முதல் 70 செ.மீ வரையிலான சிறு சுனாமி ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும் 33 பேர் காயமடைந்தனர். மேலும், மேலும் சுமார் 90,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சாலைகளில் விரிசல்களும், சில கட்டிடங்களுக்குச் சேதங்களும் ஏற்பட்டன. சுமார் 550 கி.மீ தொலைவில் தெற்கே உள்ள டோக்கியோவிலும் இந்த அதிர்வுகள் உணரப்பட்டன.
இந்த ஹொக்காய்டோ- சன்ரிகு பகுதிக்கு முதல் முறையாக மாபெரும் நிலநடுக்கம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது நிகழ 1% மட்டுமே வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள். 1% தான் என்றாலும் கூட நிலநடுக்கம் ஏற்படும்போது பேரழிவு ஏற்படும். இதன் காரணமாகவே ஜப்பானின் இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
காரணம்
நமது பூமி டெக்டானிக் தட்டுகளால் ஆனது என்பது அனைவருக்கும் தெரியும். அதில் வட அமெரிக்க மற்றும் ஓகோட்ஸ்க் தட்டுகளுக்குக் கீழ் பசிபிக் தட்டு போகும் இடத்தில் ஜப்பான் அமைந்துள்ளது. இதனால் அந்த இடத்தில் மிக பெரிய பிரஷர் இருந்து கொண்டே இருக்கும். இந்த பிரஷர் வெளியேறும்போது தான் நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடந்த 2011இல், ஜப்பானின் தோஹோகுவில் ஏற்பட்ட 9 ரிக்டர் நிலநடுக்கம், பேரழிவு ஏற்படுத்தும் சுனாமியைத் தூண்டியது. இதில் கிட்டத்தட்ட 20,000 பேர் உயிரிழந்தனர். புகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையத்தையும் அது முடக்கியது குறிப்பிடத்தக்கது..
இந்தியாவுக்கு ஆபத்து?
ஜப்பானின் வடக்குப் பகுதியில் ஏற்படக்கூடிய ஒரு மாபெரும் நிலநடுக்கம், முக்கியமாக வடமேற்கு பசிபிக் பகுதிகளை, குறிப்பாக ஜப்பான், ரஷ்யாவின் தூர கிழக்கு மற்றும் அலாஸ்காவின் அலெஷியன் தீவில் ஆபத்தை ஏற்படுத்தும். அதேநேரம் இதனால் இந்தியாவில் எந்தவொரு ஆபத்தும் ஏற்படாது. சுமாத்ராவிற்கு அருகிலுள்ள சுண்டா (ஜாவா) புவி தட்டு பகுதியில் நிலநடுக்கம் ஏற்படும்போது மட்டுமே இந்தியாவுக்கு சுனாமி ஆபத்து இருக்கிறது.
2004ல் ஏற்பட்ட சுனாமி தான் இந்திய வரலாற்றில் மிக மோசமானது. அது கூட சுமாத்ராவுக்கு அருகே ஏற்பட்ட 9.1 ரிக்டர் நிலநடுக்கத்தை ஏற்பட்டவை தான். எனவே, ஜப்பானுக்குக் கொடுக்கப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications