கடைசி நேர திக் திக்.. சாதித்த ஜப்பான்.. விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது.. ஆனால் ஒரு டுவிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதா இல்லையா என்பது குறித்து கடைசி நேர பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் விண்கலத்துடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் விண்கலம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியதாகவும் ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விண்வெளித்துறையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய 4 நாடுகள் மட்டுமே முன்னிலை வகித்து வருகின்றன. கடந்த ஆண்டு இந்தியாவின் சந்திரயான் விண்கலம் நிலவில் சாஃப்ட் லேண்டிங் முறையில் தென் துருவத்தில் தரையிறங்கி புதிய வரலாறு படைத்தது. நிலவு குறித்த ஆராய்ச்சியில் இதுவரை எந்த ஒரு நாடுமே கால் பதிக்காத தென் துருவத்தில் தரையிறங்கிய சந்திரயான் விண்கலம் தொடர்ந்து 14 நாட்கள் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டது.

Japan space agency checking Jaxx checking spacecraft health on moon

முன்னதாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க லுனா 25 என்ற விண்கலத்தை ரஷ்யா விண்ணுக்கு அனுப்பியது. இந்தியாவின் சந்திரயான் விண்கலத்திற்கு முன்பாக நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் வகையில் ரஷ்யா இந்த விண்கலத்தை அனுப்பியது. ஆனால், ரஷ்யாவின் இந்த லுனார் விண்கலம் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், தற்போது நிலவின் மென்மையான முறையில் (சாப்ட் லேண்டிங்) விண்கலத்தை முயற்சியில் ஜப்பான் இறங்கியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு அடிப்படையில்: சந்திரனை ஆய்வு செய்வதற்கான ஸ்மார்ட் லேண்டர் (SLIM) என்ற விண்கலத்தை ஜப்பான் விண்ணில் செலுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த விண்கலத்துடன் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. கிறிஸ்துமஸ் தினத்தன்று நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சென்றது. இந்த விண்கலத்தை இன்று நிலவின் மேற்பரப்பில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறக்கும் பணி நடந்தது.

லேண்டிங் செய்யும் கடைசி 20 நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை என்று ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். ஒரு சிறிய கார் அளவு கொண்ட இந்த விண்கலம் நிலவில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் போது விண்கலம் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் தானாகவே தரையிறங்கும் வகையில வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிலவின் தோற்றம் குறித்து ஆய்வு: விண்கலத்தில் உள்ள கேமராக்கள், சென்சார்கள் ஆகியவை மூலமாக கற்கள், பாறைகள், பள்ளங்கள் ஆகியவற்றை கண்டறிந்து தரையிறங்கும் ஆட்டோமெட்டிக்காக தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலவின் ஷியோலி பள்ளம் அருகே மத்திய அட்சரேகையில் இந்த விண்கலம் தரையிறங்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிலவின் ஷியோலி பள்ளம் அருகே தாதுக்கள் மற்றும் ஒலிவின் நிறைந்து இருப்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்வதன் மூலம் நிலவின் தோற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளமுடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். நிலவில் தரையிறங்கும் போது அதன் தாக்கத்தை உணரும் வகையில் 3 டி பிரிண்ட் அலுமினியம் லேண்டிங் கருவிகள், மல்டி பிராண்ட் கேமரா (MBC) ஆகியவைகளுடன் இரண்டு சிறிய ரோவர் கருவிகளான LEV-1 LEV-2 - ஆகியவை உள்ளன.

சோலார் மின்சக்தி கிடைக்கவில்லை: விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதா இல்லையா என்பது குறித்து கடைசி நேர பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் விண்கலத்துடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் விண்கலம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியதாகவும் ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும், நிலவில் விண்கலம் தரையிறங்கும் போது ஒரு சிறு தடங்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, விண்கலத்திற்கு இன்னும் சோலார் மின்சக்தி கிடைக்கவில்லை. பேட்டரி மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் மூலமே விண்கலம் செயல்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விண்கலத்தின் ஆயுட்காலம் பாதிக்கப்படுமா? என்பது குறித்து தகவல் எதுவும் கொடுக்கவில்லை.

ஐந்தாவது நாடு என்ற பெருமை: முன்னதாக, நிலவின் விண்கலம் தரையிறங்கிய கடைசி கட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஏனெனில், டேடா தரவுகளை அளிக்கும் டெலிமெட்ரியில் விண்கலம் தரையிறங்கிய தகவல் கிடைத்தது. ஆனாலும் விண்கலம் தரையிறங்கியதை ஜப்பான் உறுதி செய்யாமல் நேரடி ஒளிபரப்பையும் நிறுத்தி வைத்தது. இதனால், விண்கலம் தரையிறங்கியதா அல்லது தரையிறங்குவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டதா பல்வேறு கேள்விகள் எழுந்தன.

எனினும், அடுத்த சில மணி நேரங்களில் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை உறுதி செய்தது. இதன் மூலம், நிலவில் விண்கலத்தை சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறக்கிய ஐந்தாவது நாடு என்ற பெருமை ஜப்பானுக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்பாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய 5 நாடுகள் மட்டுமே நிலவில் இந்த முறையில் கால் பதித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+