கடல் பிளக்கும்.. மெகா சுனாமி தாக்கும்.. பூமியை நெருங்கும் பேரழிவு! ஜப்பான் பாபா வாங்கா பகீர் கணிப்பு
டோக்கியோ: வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்வது நம் அனைவருக்குமே பிடிக்கும். உலகில் வெகு சிலருக்கு உலகில் வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கணிக்க முடியும். அதற்கு அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இல்லை என்றாலும் இவர்களின் கணிப்புகள் முக்கியத்துவம் பெறும். அப்படி தான் ஜப்பானைச் சேர்ந்த ரியோ மிகப் பெரிய ஒரு பகீர் கணிப்பை விட்டுச் சென்றிருக்கிறார்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த மங்கா கலைஞர் ரியோ டாட்சுகி என்பவரைத் தான் "புதிய பாபா வங்கா" என்று அழைக்கிறார்கள். இவரும் பாபா வாங்காவை போலவே வரும் காலம் குறித்துப் பல கணிப்புகளைச் செய்து வருகிறார். இவர் அடுத்த மாதம் ஜப்பானை ஒரு பெரிய சுனாமி தாக்கும் என்று கணித்துள்ளார். இது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பலரும் தங்கள் ஹாலிடே சுற்றுலாவையும் ரத்து செய்து வருகிறார்கள்.

சரியாக ஒரே மாதம்
சரியாக ஒரு மாதம் கழித்து, அதாவது ஜூலை 5ம் தேதி ஒரு பேரழிவு ஏற்படும் என்பதை ரியா கணித்துள்ளார். ஜப்பானுக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் பிளவு ஏற்படும் என்றும் இதனால் சுனாமி அல்லது மிகப் பெரிய பூகம்பம் ஏற்படும் என்றும் அவர் கணித்துள்ளார். கடந்த 2011ல் 18,000 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த ஜப்பானில் ஏற்பட்ட டோஹோகு நிலநடுக்கம் மற்றும் சுனாமியை அவர் முன்பு துல்லியமாகக் கணித்ததால் அவரது இந்த கணிப்பும் முக்கியத்துவம் பெறுகிறது.
ஜப்பான் மக்கள் அச்சம்
டாட்சுகியின் கணிப்புகளால் ஜப்பானுக்குச் செல்வோர் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் அங்கு விமான முன்பதிவுகள் 83% குறைந்துள்ளன. ரியா கணிப்பு குறித்த அச்சம் காரணமாக ஆசியா சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணங்களை ரத்து செய்து வருகின்றனர். ஜூன் முதல் ஜூலை தொடக்கம் வரையிலான காலகட்டத்திற்கான முன்பதிவுகள் 83% வரை சரிந்துள்ளன. ஹாங்காங்கில் மட்டும் 50% வரை புக்கிங் குறைந்துள்ளது. பலரும் இவரது கணிப்பால் தங்கள் விடுமுறை டிரிப்பை ரத்து செய்கிறார்கள். அல்லது ஒத்திவைத்து விடுகிறார்கள்.
அதிகாரிகள்
இருப்பினும் ரியோவின் கணிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும், அவை முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் ஜப்பானிய அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக மியாகி மாகாண ஆளுநர் யோஷிஹிரோ முராய் கூறுகையில், "சமூக வலைத்தளங்களில் ஆதாரமற்ற வதந்திகள் பரவுவது சுற்றுலாத் துறையைப் பாதித்தால் அது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும். ஜப்பானியர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பித்துச் செல்ல தேவையில்லை.. சர்வதேச சுற்றுலாப் பயணிகளும் கூட வதந்திகளைப் புறக்கணித்துவிட்டு ஜப்பான் வர வேண்டும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
அதற்காக ஜப்பானுக்குப் பூகம்ப ரிஸ்கே இல்லை எனச் சொல்ல முடியாது. ஜப்பன் ரிங் ஆஃப் பயர் பகுதியில் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டால் 2.98 லட்சம் பேர் வரை உயிரிழக்கலாம் என ஜப்பான் அரசே எச்சரித்தது. அதேநேரம் பூகம்பங்கள் துல்லியமாக எங்கே.. எப்போது ஏற்படும் என்பதைக் கணிக்க முடியாது என்பதால் ரியோ டாட்சுகி தனது கணிப்புகளை மிகைப்படுத்த வேண்டாம் என்றும் அதிகாரிகள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
ரியோவின் முந்தைய கணிப்புகள்
1995 கோபி (Kobe) பூகம்பம்: இந்த கோபி பூகம்பத்தைத் தான் அவர் முதல்முறையாகத் துல்லியமாக முன்கூட்டியே கணித்திருந்தார்.
2011 டோஹோகு பூகம்பம் மற்றும் சுனாமி: சுமார் 18,000 பேருக்கும் மேல் உயிரிழந்த டோஹோகு பூகம்பம் மற்றும் சுனாமியை துல்லியமாகக் கணித்தார். இதுவே அவரை ஜப்பான் முழுக்க பிரபலமடைய வைத்தது.
கொரோனா: 2020ல் ஒரு வைரஸ் வெடிப்பு ஏற்படும் என்பதையும் கூட அவர் கணித்திருந்தார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications