குதிரைவால் ஹேர்ஸ்டைல் வேண்டாம்... பள்ளி மாணவிகளுக்கு தடை போட்ட ஜப்பான் - ஏன் தெரியுமா?
பள்ளி மாணவிகள் குதிரைவால் ஹேர்ஸ்டைல் செய்ய வேண்டாம் என ஜப்பானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ: நம் ஊரில் பள்ளிகளுக்கு இரட்டை ஜடை போட்டு மாணவிகள் வரவேண்டும் என்று எப்படி ரூல்ஸ் உள்ளதோ அதே போல ஜப்பானிலும் பல விசித்திரமான ரூல்ஸ்கள் உள்ளன அதில் ஒன்றுதான் போனிடெய்ல் போட்டு பள்ளிக்கு வரக்கூடாது என்பது.
ஜப்பானில் உள்ள பள்ளிகள், மாணவிகள் பள்ளிக்கு குதிரை வால் (Ponytails) வகை சிகையலங்காரத்தில் வருவதற்கு தடை விதித்துள்ளது. குதிரை வால் வகை சிகையலங்காரம் அணிந்து வரும்போது மாணவிகளின் கழுத்து பகுதி மாணவர்களுக்கு பாலியல் உணர்ச்சியை தூண்டும் என்பதால் இந்த தடை விதித்திருப்பதாக தெரிவித்துள்ளது.
இது போன்ற வினோதமான விதிகள் ஏற்படுத்தப்படுவது ஜப்பானில் இது முதல் முறை இல்லையென்றாலும் இந்த தடைக்கு அங்கு பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

பக்ஞ்சுவாலிட்டி
ஜப்பான் பள்ளிகளில் நேர ஒழுக்கத்தை கணக்கச்சிதமாக கடைபிடிக்கிறார்கள். வகுப்பிற்கு தாமதமாக வருகிறவர்களுக்கு கண்டிப்பாக பள்ளியில் அனுமதி கிடையாது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே பள்ளியில் இருக்குமாறு தான் மாணவர்களை பழக்கியிருக்கிறார்கள். ஐந்து முறைக்கும் மேல் தாமதமாக வந்தால் தண்டனை வழங்கப்படுகிறது.

பள்ளிகளில் சத்துணவு
ஜப்பான் பள்ளிகளில் வீட்டு உணவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகமே மாணவர்களுக்கு உணவு கொடுக்கும். இங்கே சத்துணவு என்பதை எதோ தரக்குறைவு என்று பார்த்து பலரும் சாப்பிட மறுக்கும் அதே வேலையில் அங்கே ஒவ்வொரு மாணவரும் பள்ளியில் அளிக்கும் உணவையே சாப்பிட்டாக வேண்டும். எல்லாருக்கும் சமமான சத்தான ஆகாரங்கள் வழங்கப்படும். இவற்றை வீணாக்கினால் தண்டனையும் வழங்கப்படுகிறது.

விடுமுறை எப்படி
தமிழகத்தைப் போல காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை என்றெல்லாம் கிடையாது. ஜப்பானில் ஒரு வருடத்தில் நடுவில் ஐந்து வாரங்கள் மட்டுமே சம்மர் பிரேக் என்று விடுமுறை அளிக்கப்படுகிறது. இப்போது மாணவிகளின் ஹேர்ஸ்டைல் முறைக்கும் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

குதிரைவால் போட தடை
ஜப்பானிய பள்ளிகள் மாணவிகளின் கழுத்தின் பின்பகுதியை பார்க்கும் மாணவர்களுக்கு பாலுணர்வு தூண்டுதல் ஏற்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. குதிரைவால் ஹேர்ஸ்டைலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையானது பெண்கள் மீதான ஆண்களின் பார்வையை தவறாக திருப்பும் விதமான பிற்போக்கு சிந்தனை என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வெள்ளை நிற உள்ளாடைகள்
பள்ளி மாணவர்கள் வெள்ளை உள்ளாடைகளை மட்டுமே அணிந்து பள்ளிக்கு வர வேண்டும் என்று சீருடைக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. உள்ளாடைகள் வண்ணத்தில் இருந்தால், அது வெளியே தெரியுமாம்! எனவே வெள்ளை உள்ளாடைகளை அணிந்தால் அது, உள்ளாடையை வெளிப்படுத்தாது என்பதால், வெண்ணிற உள்ளாடையே அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது.

தலைமுடியில் சாயம் பூசத்தடை
அதேபோல, மாணவ-மாணவியரின் காலுறைகளின் நிறம், பாவாடையின் நீளம் மற்றும் அவர்களின் புருவங்களின் வடிவம் ஆகியவற்றில் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜப்பானிய பள்ளிகளில் மாணவர்களின் தலைமுடிக்கு சாயம் பூசுவதற்கும் தடை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்ப்புகள் எழவில்லை
இதுகுறித்து கூறிய நடுநிலைப் பள்ளி ஒன்றின் முன்னாள் ஆசிரியர் மோடோகி சுகியாமா, நான் எப்போதும் இதுபோன்ற விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற விதிகளுக்கு போதுமான எதிர்ப்பு இல்லாததாலும் இது போன்ற விதிகள் சாதாரணமாகிவிட்டதாலும் மாணவிகள் அவற்றை ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications