இது உலகத்தையே மொத்தமாக மாற்றும்! கடலில் போட்டால் உடனே கரையும் பிளாஸ்டிக்.. அசத்தும் ஜப்பான்!
டோக்கியோ: பிளாஸ்டிக் என்பது இந்த காலத்தில் நமது வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. மருத்துவம் தொடங்கிப் பல துறைகளில் பிளாஸ்டிக் முக்கியமாக உதவுகிறது. ஆனால், அவை எளிதாக மக்குவதில்லை என்பதே பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதற்கு ஜப்பான் ஆய்வாளர்கள் ஒரு தீர்வை கண்டுபிடித்துள்ளனர்.
பிளாஸ்டிக் கடலில் கலக்கும் போது அவை அப்படியே பல ஆயிரம் ஆண்டுகள் மிதக்கிறது. இதனால் கடலில் சேரும் பிளாஸ்டிக் மிகப் பெரிய பிரச்சினையாகவே மாறியுள்ளது. இது தொடர்பாக உலகெங்கும் ஆய்வுகளும் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த சிக்கலுக்கு ஜப்பான் ஆய்வாளர்கள் இப்போது ஒரு தீர்வை உருவாக்கிவிட்டனர்.

புதிய வகை பிளாஸ்டிக்
அதாவது ஜப்பான் ஆய்வாளர்கள் ஒரு புதிய வகை பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளனர். இது கடலில் போட்டால் சில மணி நேரங்களில் கரைந்துவிடும் தன்மை கொண்டது என்பதே இதன் சிறப்பாகும்.. கடலில் பிளாஸ்டிக் குப்பைகள் பெருகி வருவது மிகப் பெரிய சிக்கலாக மாறி பிளாஸ்டிக் மாசை ஏற்படுத்தி வரும் சூழலில் அதற்கு இது ஒரு சிறந்த தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதையும் தடுக்க முடியும்.
இந்த மக்கும் பிளாஸ்டிக் குறித்து விஞ்ஞானிகள் நீண்ட காலமாகவே பரிசோதனை செய்து வருகின்றனர். டோக்கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள இந்த புதிய பிளாஸ்டிக், மிக விரைவாக உப்பு நீரில் கரையும் என்றும் இது வேறு எந்தவிதமான எச்சத்தையும் விட்டுச் செல்லாது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கரைந்து போகும்
இது எப்படி வேலை செய்கிறது என்பதை விளக்கும் வகையில் டோக்கியோவுக்கு அருகிலுள்ள வாகோ நகரில் உள்ள ஆய்வகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் உப்பு நீர் நிரப்பப்பட்ட ஒரு கேனில் சிறிய பிளாஸ்டிக் துண்டு போடப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்தில் அந்த பிளாஸ்டிக் மொத்தமாகக் கரைந்து மறைந்து போனது. இந்த கண்டுபிடிப்பை பிஸ்னஸாக எப்படி மாற்றுவது என்பது குறித்து எந்தவொரு திட்டமும் வகுக்கப்படவில்லை எனக் குறிப்பிடும் ஆய்வாளர்கள், பலரும் இதில் ஆர்வமாக இருப்பதால் ஆய்வுகளைத் தீவிரப்படுத்த உள்ளதாகத் தெரிவித்தனர்.
ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவு பிரச்சனைக்குப் புதுமையான தீர்வுகளைக் காண உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் கணிப்புப்படி, 2040ல் பிளாஸ்டிக் மாசு மூன்று மடங்காக அதிகரிக்கும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் 23-37 மில்லியன் மெட்ரிக் டன் கழிவுகள் கடலில் கலக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வாளர்கள் சொல்வது என்ன
இது தொடர்பாகத் தலைமை ஆய்வாளர் டகுசோ ஐடா கூறுகையில்,"குழந்தைகள் அவர்கள் வாழப்போகும் பூமியைத் தேர்ந்தெடுக்க முடியாது. அவர்களுக்குச் சிறந்த சூழலை விட்டுச் செல்வது நமது கடமை.. எங்கள் புதிய பிளாஸ்டிக் வழக்கமான பிளாஸ்டிக்குகளைப் போலவே வலிமையானது. ஆனால் உப்புடன் கலக்கும்போது அது உடைந்து போகும். இயற்கையாக உருவாகும் பாக்டீரியாக்கள் அதை மேலும் சிதைத்துவிடும். இதன் மூலம், கடல் வாழ் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நுண்ணிய பிளாஸ்டிக்குகள் உருவாகுவது தவிர்க்கப்படும்" என்றார்.
உப்பு மண்ணிலும் இருப்பதால், ஐந்து சென்டிமீட்டர் அளவுள்ள ஒரு பிளாஸ்டிக் துண்டு நிலத்தில் 200 மணி நேரத்துக்குப் பிறகு சிதைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆய்வு
இந்த பிளாஸ்டிக் மீது கோடிங் பூசப்பட்டால், அதை வழக்கமான பிளாஸ்டிக் போலவே பயன்படுத்தலாம். இப்போது அப்படி கோடிங் கொடுக்க எது சிறப்பானதாக இருக்கும் என்பதில் கவனம் செலுத்தி வருவதாக ஐடா கூறினார். இந்த பிளாஸ்டிக் நச்சுத்தன்மையற்றது, தீப்பற்றாதது மற்றும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றாது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடலில் கரையும் தன்மை கொண்ட இந்த புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு, பிளாஸ்டிக் மாசை குறைப்பதற்கான ஒரு சிறந்த தீர்வாகப் பார்க்கப்படுகிறது.
-
பரிதாபமாக சீரழியும் பாகிஸ்தான்.. இப்படியொரு நிலைமை ஏற்பட்டதே இல்லை.. ரொம்பவே மோசம்! -
மூழ்கடிக்கப்படும் ரூ.63,000 கோடி.. கடலுக்கு அடியில் அமையும் 73,000 டன் பிரம்மாண்டம்! என்ன மேட்டர் -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications