இது நாடு.. இது சேவை... ஒரே ஒரு மாணவிக்காக மட்டும் இயங்கும் ரயில்வே ஸ்டேஷன்!
டோக்கியோ: ஜப்பானில் ஒரே ஒரு மாணவிக்காக காலையிலும், மாலையிலும் ரயில் ஒன்று இயங்கி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டின் ஹொக்காய்டா மாவட்டத்தில் உள்ளது காம்கி மற்றும் சிராடாகி கிராமங்கள். இந்த இரண்டு கிராமங்களையும் இணைப்பதற்காக முன்பு ரயில் ஒன்று இயக்கப்பட்டு வந்தது. ஆனால், போதிய பயணிகள் இதில் பயணம் செய்யவில்லை.
இதனால், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இதனை இழுத்து மூட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால், இந்த ரயில் மூலமாகவே மாணவி ஒருவர் கல்வி கற்க வேறு ஊருக்கு சென்று வருவது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து மாணவியின் கல்விக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது எனக் கருதிய ரயில்வே நிர்வாகம், அந்த ரயில்வே ஸ்டேஷனை மூடும் முடிவைக் கைவிட்டது.
தற்போது அந்த ஒரு மாணவிக்காக மட்டுமே அந்த ரயில்வே ஸ்டேசன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சரியாக காலையில் 7 மணியளவில் வரும் ரயிலில் ஏறி அம்மாணவி பள்ளிக்கு செல்வார். பின் மீண்டும் மாலையில் 5 மணியளவில் அதே ரயில் மூலம் அவர் தன் கிராமத்திற்கு திரும்பி விடுவார்.
வரும் மார்ச் மாதத்துடன், அம்மாணவியின் படிப்பு முடிவடைய இருக்கிறது. அதன்பின், அந்த ரயில்வே ஸ்டேஷன் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம் நாட்டில் பல இடங்களில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமல் ஆற்றைக் கடந்து, மலையைக் கடந்து கல்வியைத் தேடி மாணவர்கள் ஆபத்தான பயணங்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஒரே ஒரு மாணவிக்காக ஜப்பானில் ரயில்வே நிர்வாகம் ரயில் ஒன்றை இயக்கி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications