காஸா மீதான இஸ்ரேலிய முப்படைகள் படையெடுப்பு.. போர் முனையில் நிற்கும் 200 'இந்திய' இஸ்ரேலியர்கள் யார்?

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: காஸா மீதான இஸ்ரேலின் மூர்க்கமான முப்படைகளின் படையெடுப்பில் இணைந்து களமுனையில் 200க்கும் மேற்பட்ட "இந்திய இஸ்ரேலியர்கள்" அல்லது "பெனி இஸ்ரேலியர்கள்" ஆயுதங்களுடன் காத்திருக்கின்றனர். யார் இந்த பெனி இஸ்ரேலியர்கள் அல்லது "இந்திய இஸ்ரேலியர்கள்".

உலகின் பழமையான இனங்களில் ஒன்று யூதர்கள். நாடற்றவர்களாக அடித்து விரட்டப்பட்ட பின் சர்வதேச அரசியல் விளைவுகளால் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியில் குடியேற்றப்பட்டு 'இஸ்ரேல்' எனும் ஒரு நாடு 1948-ல் தான் பிறந்தது. இப்போது பாலஸ்தீனத்தின் பெரும்பகுதியை இஸ்ரேல் கைப்பற்றி பாலஸ்தீனர்களை தாயக நிலப்பரப்புக்காக போராடும் "பயங்கரவாதிகளாக" சர்வதேசம் உருமாற்றி வைத்திருப்பது விந்தையானதுதான்!

 Jews from India joined in Israel to fight against Hamas

இந்தியாவில் யூதர்கள்: சரி இப்போது போர் முனையில் நிற்கும் இந்திய இஸ்ரேலியர்கள் யார்? இவர்களுக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு? என்கிற கேள்விக்கான 2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடங்குகிறது. இன்றைய மகாராஷ்டிராவின் நவ்கோனில்தான் முதல் யூத குடியேற்றம் நிகழ்ந்தது என்கின்றன சரித்திர குறிப்புகள். இன்றளவும் மகாராஷ்டிராவில் வசிக்கும் யூதர்களுக்கு பெனி இஸ்ரேலியர்- ஷானிவர் டெலிஸ் என்கிற பெயர்கள் உண்டு. இப்படி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் யூதர்கள் ஒவ்வொரு கால கட்டமாக குடியேறினர்.

கேரளா டூ வடகிழக்கு: சேர மன்னர் சேரமான் பெருமாள் ஆட்சிக் காலத்தில் யூதர்கள், இன்றைய கேரளாவுக்குள் குடியேறியததாக வரலாற்று பக்கங்கள் சொல்கின்றன. பாக்தாதி யூதர்கள் 1790களில் இந்தியாவுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. கடல் வழிப் பாதை சார்ந்த கேரளா மட்டுமல்ல.. மணிப்பூர், மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கும் காலந்தோறும் யூதர்கள் இடம் பெயர்ந்தனர் என்பது வியபுக்குரியது.

பெனி இஸ்ரேலியர்கள்: ஆங்கிலேயர்கள் ஆட்சியில் மும்பைக்கு குடிபெயர்ந்தனர். 1948-ல் இஸ்ரேல் உதயமான போது இந்த பெனி இஸ்ரேலியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்தியாவிலேயே தங்கிவிட்டனர். பல பெனி இஸ்ரேலியர்கள் இந்திய நிலப்பரப்பின் மரபுகளை இணைத்த ஒரு புதிய வாழ்வியலை பின்பற்றவும் செய்கின்றனர். இப்படிப்பட்ட பெனி இஸ்ரேலியர்கள், குறிப்பிடத்தகுந்த அளவில் இஸ்ரேலுக்கும் குடியேறினர்.

காஸா களமுனையில் பெனி இஸ்ரேலியர்கள்: இப்போது ஜெருசலேமில் காஸா மீதான படையெடுப்பு களத்தில் நிற்கும் Eleazar Chungthang என்ற 29 வயது ராணுவ வீரர், ஒரு பெனி இஸ்ரேலியர். இந்தியாவின் மணிப்பூரில் பிறந்து வளர்ந்து இப்போது இஸ்ரேல் நிலத்துக்கான யுத்தத்தில் இணைந்திருப்பவர். தம்முடன் 200க்கும் மேற்பட்ட பெனி இஸ்ரேலியர்கள், தாயகத்தை காப்பாற்றும் யுத்தத்தில் இணைந்திருக்கிறோம் என்கின்றனர்.

85,000 பெனி இஸ்ரேலியர்கள்: தற்போதைய நிலையில் இஸ்ரேலில் மட்டும் 85,000 இந்திய இஸ்ரேலியர்கள்- பெனி இஸ்ரேலியர்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.காஸா மீதான யுத்தத்தில் பெனி இஸ்ரேலியர்கள் எனப்படும் இந்திய இஸ்ரேலியர்கள் பங்கு மிக முக்கியமானதாகவும் இருக்கும் எனவும் பெருமிதப்படுகின்றனர். வரலாறு விசித்திரமானதுதான்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+