ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல்.. இரவோடு இரவாக காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர் லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி திங்கள் கிழமை நள்ளிரவு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் லிஸ்ட் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் நிதி அமைச்சர் ராமேஸ்வர் ஒரோன் மற்றும் மூத்த தலைவர் அஜோய் குமார் ஆகியோரும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

ஜார்கண்ட் மாநில சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவு பெற உள்ளது. இதனால் அதற்குள் அங்கு புதிய அரசு தேர்வு செய்யப்படுவது அவசியம் என்பதால் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

jharakhand-assembly-elections-2024-congress-releases-first-list-of-21candidates

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது இந்தியா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஜார்க்கண்ட் மூக்தி மோர்ச்சா கட்சியின் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. ஜார்க்கண்டில் ஆட்சியை பிடிக்க பாஜக வியூகம் வகுத்து வரும் நிலையில் ஆட்சியை தக்க வைக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி வியூகம் வகுத்து வருகிறது. இதனால், ஜார்க்கண்ட் தேர்தல் களம் அனல் பறக்கிறது.

இந்தியா கூட்டணியில் ஜார்க்கண்ட் முத்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் 70 தொகுதிகளில் போட்டியிடும் என உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதர 11 தொகுதிகள் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி திங்கள் கிழமை நள்ளிரவு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

21 தொகுதிகளுக்கான வேட்பாளர் லிஸ்ட் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் நிதி அமைச்சர் ராமேஸ்வர் ஒரோன் மற்றும் மூத்த தலைவர் அஜோய் குமார் ஆகியோரும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். லோஹர்டகா தொகுதியில் ஒரோனும் ஜாம்செட்பூர் கிழக்கு தொகுதியில் அஜோய் குமாரும் போட்டியிடுகிறார்கள்.

முன்னதாக பாஜக முதல்கட்டமாக 66 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் சரைக்கேலாவிலும், முன்னாள் முதல்வர் சிபு சோரனின் மூத்த மருமகள் சீதா சோரன் ஜம்தரா தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.

ஜார்க்கண்ட் பாஜக தலைவரான மரண்டி, தன்வார் தொகுதியில் போட்டியிடுகிறார். சம்பாய் சோரன், அவரது மகன் பாபுலால் சோரன் முறையே சரைகெல்லா மற்றும் கட்ஷிலா தொகுதியில் போட்டியிடுகின்றார்கள். ஹேமந்த் சோரன் மனைவியின் உறவினரான சீதா சோரனும் இந்த முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+