பிரிந்து போன காதலி... வேதனையில் காதலி ஓட்டி வந்த ரயில் முன் பாய்ந்து இறந்த காதலன்
எடின்பர்க்: காதலி பிரிந்த தோல்வியில் மனமுடைந்த காதலன், காதலி ஓட்டி வந்த ரயிலின் முன்பு பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஸ்காட்லாந்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
ஸ்காட்லாந்தின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் என்ற பெருமைக்குரியவர் மேக்டொனால்ட். இவர் தனது 19 வது வயதில் ரயில்வேயில் பணிக்கு சேர்ந்து பின்னர் 2009ம் ஆண்டு டிரைவராக பணியில் அமர்ந்தார்.
மேக்டொனால்ட்டும், கேரி வெல்ஸ் என்பவரும் கடந்த எட்டாண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவர்களது காதல் முறிந்தது.
இதனால் மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார் வெல்ஸ். காதலி பிரிந்த துக்கம் தாளாமல் இருந்தவர் காதலி கைகளாலேயே மரணத்தைத் தழுவுவது என முடிவு செய்தார்.
அதன்படி, நேற்று காதலி ஓட்டிவந்த ரயிலின் முன்பு போய் நின்று கொண்டார். இதை எதிர்பாராத காதலி அதிர்ச்சி அடைந்து விட்டார். ஆனால் ரயிலை நிறுத்த முடியவில்லை. ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் வெல்ஸ்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வெல்ஸ்சின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வெல்ஸ்சின் இந்த தற்கொலை முடிவால் அவரது உறவினர்களும், நண்பர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications