கொலைவழக்கில் 53 ஆண்டு சிறை: தீர்ப்பு வழக்கிய நீதிபதி தலைமையில் காதலியை மணந்த குற்றவாளி
லாஸ்ஏஞ்சல்ஸ்: கொலை வழக்கில் கைதாகி 53 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற கைதி ஒருவர், தீர்ப்பு வழங்கிய நீதிபதி முன்னிலையிலேயே காதலியைக் கரம் பிடித்த விநோதச் சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவில் சாண்டியாகோவை சேர்ந்த டான்னே டெஸ்புரோ (36) என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லெமன் கிரோவ் பகுதியை சேர்ந்த ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காகக் இவர் கைது செய்யப்பட்டார்.
சாண்டியாகோ ஹைகோர்ட்டில் நடந்து வந்த விசாரணையின் முடிவில் டான்னே குற்றவாளி என்பது நிரூபணமானது. அதனைத் தொடர்ந்து நீதிபதி பட்ரீசியா கூக்சன், டான்னேக்கு 53 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
தீர்ப்பு தனக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை என்பதை ஏற்கனவே யூகித்திருந்த டான்னே, தீர்ப்பு கூறப்பட்ட சில நிமிடங்களிலேயே தனது காதலியை நீதிபதி பட்ரீசியா கூச்சன் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ள அனுமதி பெற்றிருந்தார்.
அதன்படி, 53 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற டான்னே, தனது 33 வயது காதலி டெஸ்டினியை மணந்தார். கோர்ட்டில் இருந்த மற்ற நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் விசாரணைக்கு வந்தவர்கள் என அனைவரும் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தினார்கள்.
53 ஆண்டுகளுக்குப் பிறகு டான்னே உயிரோடு வெளியே வரும் போது, தானும் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சியாக வாழ்வோம் என்ற நம்பிக்கையில் அவர்களது திருமணத்திற்கு தானே கேக் தயாரித்துக் கொண்டு வந்திருந்தார் மணப்பெண் டெஸ்டினி.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications