காபூல் குண்டுவெடிப்பு: அமெரிக்க வீரர்கள் 12 பேர் பலி.. அவசர அறையில் பிடன்.. தாலிபான்களும் கண்டனம்
காபூல்: ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 12 அமெரிக்க வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து காபூல் தாக்குதலுக்கு தாலிபான்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின் முதல்முறையாக மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு உள்ள காபூல் விமான நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 606 பேர் வரை பலியாகி உள்ளனர். உண்மையான பலி எண்ணிக்கை விவரம் இன்னும் வெளியாகவில்லை.
80 பேருக்கும் அதிகமானோர் இதில் காயம் அடைந்துள்ளனர். இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் இந்த காபூல் விமான நிலைய தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அமெரிக்க படை
காபூல் விமான நிலையத்தில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 12 அமெரிக்க வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் 5 வீரர்கள் காயம் அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி அங்கு 4 அமெரிக்க வீரர்கள் பலியானதாகவும் 5க்கும் அதிகமான வீரர்கள் மோசமாக காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

மீட்டிங்
இந்த தாக்குதலை முதலில் பென்டகன் அமைப்புதான் உறுதி செய்தது. இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததும் உடனடியாக அமெரிக்க அதிபர் பிடன் வெள்ளை மாளிகையில் இருக்கும் Situation Room எனப்படும் அவசர அறைக்கு சென்று அவசர மீட்டிங் நடத்தினார். 5,525 சதுர அடி கொண்ட மிகப்பெரிய இந்த அறையில் காபூலில் நடக்கும் விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில் லைவ் சாட்டிலைட் வீடியோ, டிரோன் வீடியோ மூலம் நிலைமையை கண்காணித்தார். அமெரிக்க வீரர்களின் நிலை குறித்தும் ஆலோசனை செய்தார்.
|
கண்டனம்
காபூல் தாக்குதலுக்கு தாலிபான்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் அமைப்பிற்கும் தாலிபான்களுக்கும் மோதல் நிலவி வருகிறது. இதன் காரணமாக, இந்த தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாகவும், மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம், இது போன்ற நாசகார கும்பல்கள் உடனே தடுக்கப்படும் என்று தாலிபான்களும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை
இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் இருந்து மக்கள் உடனே வெளியேற வேண்டும் என்று அமெரிக்க படைகள் உத்தரவிட்டுள்ளது. அங்கு மோசமான தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாலும். அங்கு இப்போது பாதுகாப்பான சூழ்நிலை இல்லாத காரணத்தாலும் உடனே அங்கிருந்து ஆப்கானிஸ்தான் மற்றும் பிற நாட்டு மக்களும் வெளியேற வேண்டும் என்று அமெரிக்க படைகள் கோரிக்கை வைத்து உள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications