கடல் கடந்தும் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா! துபாயில் புகழஞ்சலி செலுத்திய தமிழர்கள்!
துபாய்: ஐக்கிய அரபு அமீரக திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா துபாயில் கொண்டாடப்பட்டது. கடல் கடந்து கருணாநிதிக்காக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் அங்குள்ள திமுக ஆதரவாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா துபாயில் உள்ள தேரா பகுதியில் அமைந்துள்ள லேண்ட்மார்க் கிராண்ட் ஹோட்டலில் நடைப்பெற்றது.

அமீரக திமுக பொறுப்பாரும், வெளிநாடு வாழ் தமிழர் நலவாரிய உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரான் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்வில் துபாய் வாழ் தமிழர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்து காரணமாக ஆடம்பரமின்றி எளிமையான முறையில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா துபாயில் நடைப்பெற்றது. இதனிடையே இந்த நிகழ்ச்சியில் பேசிய அமீரக திமுக பொறுப்பாளர் எஸ்.எஸ்.மீரான், கருணாநிதியின் கனவுத் திட்டங்களை நிறைவேற்றி வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் துணை நிற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அமீரக எழுத்தாளர் ஆசிஃப் மீரான், கருணாநிதியின் சாதனைகளையும், அவரது இலக்கிய படைப்புகள் குறித்தும் எடுத்துக் கூறினார். கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டம் நிறைவுற்றதும் அவரது படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் அமீரக எழுத்தாளர் ஜெஸிலா பானு, எகனோமிக் குரூப் சிராஜ், கடையநல்லூர் முஸ்தஃபா, செந்தில் பிரபு, இளமுருகன்,இர்ஷாத், பருத்தி இக்பால், பாலா, ஜெகபர் அலி மற்றும் அமீரக திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications