கேஸ் போடுவேன்: கத்ரா ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதாக அறிவிக்கப்பட்ட பெண் விமானி மிரட்டல்
துபாய்: ஜம்முவில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலுக்கு அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதாக அறிவிக்கப்பட்ட பெண் விமானி உயிருடன் வந்துள்ளார்.
ஜம்முவில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்புகையில் கத்ரா என்ற இடத்தில் திங்கட்கிழமை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த விமானி சுமிதா விஜயன் மற்றும் 6 பக்தர்கள் பலியாகினர். இந்நிலையில் சுமிதா விஜயன் உயிரோடு இருப்பது தெரிய வந்துள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த சுமிதா விஜயனின் புகைப்படம் கிடைக்காத நிலையில் மீடியாக்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் தேடி கேரளாவில் பிறந்து துபாயில் வசித்து வரும் வேறு ஒரு சுமிதா விஜயனின் புகைப்படத்தை எடுத்து தவறாக வெளியிட்டனர்.
இதை பார்த்த சுமிதாவின் உறவினர்கள் துபாய்க்கு போன் செய்து அவர் இறந்த செய்தியை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சுமிதா கூறுகையில்,
வேறு ஒரு சுமிதா இறந்ததற்கு என் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளனர். நான் அண்மையில் டெல்லிக்கு சென்றிருந்தேன். அதனால் என் உறவினர்கள் பயத்தில் போன் செய்தனர். நான் இன்னும் உயிருடன் தான் உள்ளேன்.
என் புகைப்படத்தை தவறாக வெளியிட்ட நாளிதழ்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் வழக்கு தொடர்வேன் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications