முடிவுக்கு வரும் கஜகஸ்தான் குழப்பம்? புதிய பிரதமர் நியமனம்.. CSTO படைகள் வெளியேற்றம்
நூர்-சுல்தான்: கஜகஸ்தானில் ஏற்பட்ட கலவரம் கட்டுக்குள் வந்துவிட்டதால், இன்னும் சில நாட்களில் அங்கிருந்து CSTO படைகள் வெளியேறத் தொடங்கும் என்று அந்நாட்டின் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் அறிவித்துள்ளார்.
மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கஜகஸ்தான், சோவியத் யூனியன் வீழ்ந்த சமயத்தில் உருவான நாடுகளில் ஒன்றாகும். அதிக எண்ணெய் வளமிக்க நாடான இங்கு எரிபொருள் விலையை அந்நாட்டு அரசு உயர்த்துவதாகத் தகவல் வெளியானது.
இது அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசின் உத்தரவை எதிர்த்துத் தொடங்கிய மக்கள் போராட்டம் மிக விரைவில் கலவரமாக மாறியது.

கலவரம்
அரசு அலுவலகங்கள், அரசுக்குச் சொந்தமான வாகனங்களைப் போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர், அந்நாட்டின் அதிபர் மாளிகைக்கும் தீ வைக்கப்பட்டது. நாளுக்கு நாள் நிலைமை மோசமானதால் நிலைமையைக் கட்டுப்படுத்த கடந்த வாரம் ராணுவக் கூட்டணியான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (CSTO) வரவழைக்கப்பட்டது. சோவித் யூனியனில் இருந்து உருவான நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டது தான் இந்த CSTO படைகளாகும். ஒரு நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க CSTO படைகள் களமிறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

சில நாட்களில்
இந்நிலையில், கஜகஸ்தான் நாட்டிற்கு புதிய பிரதமரை நியமனம் செய்துள்ள அந்நாட்டின் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ், ரஷ்யத் தலைமையிலான CSTO படைகள் இன்னும் சில நாட்களில் நாட்டில் இருந்து வெளியேறத் தொடங்கும் என அறிவித்துள்ளார். இது குறித்து அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் கூறுகையில், "CSTO படைகளின் வேலை முடிந்துவிட்டது. எனவே இன்னும் 2 நாட்களில் படைகள் வெளியேறத் தொடங்கும். அதிகபட்சமாக 10 நாட்களில் மொத்த படைகளும் வெளியேறிவிடும்" என்றார்.

பகீர் குற்றச்சாட்டு
சில வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் உதவியுடன் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடைபெறுவதாக கஜகஸ்தானும் ரஷ்யாவும் கடந்த வாரம் குற்றஞ்சாட்டியிருந்தன. இருப்பினும், இது தொடர்பாக எவ்வித ஆதாரத்தையும் அந்நாட்டு அரசு வெளியிடவில்லை. கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கடந்த வாரம் தான் அந்நாட்டு அரசு பதவி விலகியது. இந்த கலவரம் தொடர்பாக சுமார் 10,000க்கும் மேற்பட்டோரை கஜகஸ்தான் அரசு தடுப்புக்காவலில் வைத்துள்ளது.

புதிய பிரதமர் யார்
இந்தச் சூழலில் தான் அலிகான் ஸ்மைலோ என்பவரை அந்நாட்டின் புதிய பிரதமராக காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் நியமித்துள்ளார். 49 வயதாகும் அலிகான் ஸ்மைலோ, முந்தைய அரசின் முதல் துணைப் பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய பிரதமர் விரைவில் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விரைவில் கலவரம் முற்றிலுமாக கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயிரிழப்பு
கஜகஸ்தான் நாட்டில் ஏற்பட்ட இந்தக் கலவரத்தில் மொத்தம் எத்தனை பேர் உயிரிழந்தனர் எனத் தெளிவாகத் தெரியவில்லை. அரசு சார்பில் முதலில் 26 குற்றவாளிகளும் 16 பாதுகாப்புப் படையினரும் மட்டுமே உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இருப்பினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 164 பேர் இந்த கலவரத்தில் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது. இருப்பினும், உண்மையான எண்ணிக்கை இதைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications