ஆஹா.. இது தெரியாம போச்சே! இஸ்ரேல் போலீசுக்கே யூனிபார்ம் கொடுப்பது கேரளா தானாமே! இப்படி ஒரு உறவா?
இஸ்ரேல்: இஸ்ரேலில் இருந்து இந்தியா ராணுவ ஆயுதங்களை இறக்குமதி செய்து வருவது நமக்கு தெரியும். ஆனால் இஸ்ரேல் போலீசுக்கே கேரளாவில் இருந்து தான் யூனிபார்ம் செல்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆமாம் இது முற்றிலும் உண்மை. வாங்க கேரளாவில் இருந்து எப்படி இஸ்ரேலுக்கு போலீஸ் யூனிபார்ம் போகிறது என்பதை பார்க்கலாம்.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த 7 ம்தேதி போர் தொடங்கியது. திடீரென ஹமாஸஅ தீவிரவாதிகள் 7 ஆயிரம் ஏவுகணை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

இதுவரை 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் காசாவின் அல் அஹ்லி மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நோயாளிர்கள், டாக்டர்கள், ஊழியர்கள் என மொத்தம் 500 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே தான் இஸ்ரேல் காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்த தயாராகி வருகிறது. தற்போது காசாவின் எல்லை பகுதியை இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ளது. விரைவில் காசாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தவாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் போருக்கு நடுவே புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இஸ்ரேல் போலீஸ் படைக்கு கேரளாவில் இருந்து தான் கடந்த 8 ஆண்டுகளாக யூனிபார்ம் தைத்து வழங்கப்பட்டு வருகிறதாம்.
அதாவது கேரளா மாநிலம் கண்ணூர் நகரில் இருந்து தான் இஸ்ரேல் போலீசுக்கு சீருடை அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கைத்தறி தயாரிப்பு மற்றும் ஜவுளி ஏற்றுமதிக்கு புகழ்பெற்ற இந்த கண்ணூரில் மரியன் அப்பரேல் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தான் இஸ்ரேலுக்கு போலீஸ் சீருடையை வழங்கி வருகிறது.
இஸ்ரேலை பொறுத்தமட்டில் முழுக்கையுடன் கூடிய வெளிர் நீலம் என்பது தான் இஸ்ரேல் போலீசாருக்கான யூனிபார்ம் ஆக உள்ளது. அதில் இரண்டு பாக்கெட்டுகள் இருக்கும் மேலும் யூனிட்டின் டிரேட் மார்க் சின்னங்கள் இடம்பெற்றிருக்கும். தற்போது ஹமாஸ் படைக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடர்ந்துள்ள நிலையில் 100க்கும் அதிகமான தையல்காரர்கள் இஸ்ரேல் போலீசுக்கான சீருடை தைய்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மரியன் அப்பரேல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பல்வேறு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள், காவல் துறை அதகாரிகள், பாதுகாப்பு படை அதிகாரிகள், சுகாதார பணியாளர்களுக்கான சீருடைகளை ஆர்டராக பெற்று வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தொழிபுழாவை சேர்ந்த தாமஸ் ஒலிக்கல் நடத்தி வருகிறது. தொழிலதிபரான இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இந்த நிறுவனத்தில் மொத்தம் 1500க்கும் அதிகமான பயிற்சி பெற்ற ஊழியர்கள் உள்ளனர்.
இஸ்ரேல் போலீஸ் சீருடை வழங்குவது குறித்து தாமஸ் ஒலிக்கல் கூறுகையில், ‛‛இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடங்கி உள்ளது. ஆனாலும் கூட இஸ்ரேல் போலீஸ் தரப்பில் கூடுதல் சீருடைகள் வேண்டும் என ஆர்டர் அளித்துள்ளனர். நாங்கள் 8 ஆண்டுகளாக இஸ்ரேலுக்கு சீருடை தையத்து வழங்கி வருகிறோம்.
இஸ்ரேல் போன்ற போலீஸ் படைக்கு சீருடை சட்டைகள் வழங்குவது உண்மையில் எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. மேலும் இந்த ஆண்டு முதல் போலீஸ் பயிற்சி சீருடையை அவர்கள் மாற்றம் செய்ய உள்ளனர். இதற்கான ஆர்டரையும் வழங்கி உள்ளனர். இதற்கான மெட்டிரீயல் தேர்வு பணி நடந்து வருகிறது. இது முடியும் பட்சத்தில் நவம்பர் இறுதி மற்றும் டிசம்பம் தொடக்கத்தில் தையல் பணி தொடங்கும்.
மேலும் இஸ்ரேல் அதிகாரிகளே மும்பைக்கு வந்து எங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அவர்கள் எங்களின் நிறுவனத்தின் செயல்பாடுகளை 10 நாட்கள் தங்கி முழுவதுமாக பார்த்தனர். இஸ்ரேல் அதிகாரிகள் தரமான அதேவேளையில் நேர்த்தியான ஆடைகளை விரும்புகின்றனர். தற்போது அங்கு நடக்கும் போர் விரைவில் முடிவுக்கு வந்து அமைதி நிலவ வேண்டும்'' என்றார்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications