காலிஸ்தான் தீவிரவாதிகள் நாடு கடந்து தொடர் அட்டூழியம்- அமெரிக்காவில் இந்திய தூதரகத்துக்கு தீ வைப்பு!
சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு சீக்கியர்களுக்கான தனிநாடு கோரும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பஞ்சாப் உள்ளிட்ட சீக்கியர்களுக்கு தனிநாடு கோரும் அமைப்பு காலிஸ்தான். 1984-ம் ஆண்டே காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் துடைத்தெறியப்பட்டுவிட்டனர். ஆனால் காலிஸ்தான் சித்தாந்தம் இன்னமும் ஓயவில்லை. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என சீக்கியர்கள் தஞ்சம் அடைந்த நாடுகளில் மீண்டும் மீண்டும் காலிஸ்தான் கோரிக்கையை தீவிரவாதிகள் உயிர்ப்பித்து வருகின்றனர். இந்தியாவிலும் அண்மையில் காலிஸ்தான் கோரிக்கையை வலுப்படுத்த இந்த பயங்கரவாதிகள் முயற்சித்தது முறியடிக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தில் அம்ரித்பால் சிங் என்ற பயங்கரவாதி மூலம் காலிஸ்தான் கோரிக்கை தூண்டிவிடப்பட்டது. ஆனால் பல நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் அம்ரித்பால்சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அத்துடன் வெளிநாடுகளில் இருந்து காலிஸ்தான் கோரிக்கையை தூண்டிவிடக் கூடிய பயங்கரவாத குழுக்களின் தலைவர்கள் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். அண்மையில் இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் புலிப்படை இயக்கத்தின் தலைவர் ஹர்தீப்சிங் நிஜார், கனடாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இப்படுகொலைக்கு இந்தியாதான் காரணம், இந்தியாவின் ரா அமைப்புதான் இப்படுகொலையை செய்ததாக காலிஸ்தான் பயங்கரவாதிகள் குற்றம்சாட்டி வந்தனர்.
United States | A group of Khalistan radicals on July 2 set Indian Consulate on fire in San Francisco. The fire was suppressed quickly by the San Francisco Fire Department. No major damages or staffers were harmed. Local, state and federal authorities have been notified. The US… pic.twitter.com/uhx9NtML5G
— ANI (@ANI) July 4, 2023
இந்த நிலையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு நேற்று முன்தினம் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சான் பிரான்சிஸ்கோ தூதரகமே கொழுந்துவிட்டு எரியும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. காலிஸ்தான் பயங்கரவாதிகள் நாடு கடந்தும் நிகழ்த்தும் இத்தகைய கொடூர தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தீ வைப்பு சம்பவத்தில் ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின. இந்திய தூதரக பணியாளர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அம்ரித்பால்சிங் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட போதும் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் தாக்குதலுக்குள்ளானது. அப்போது காலிஸ்தான் ஆதரவு முழக்கங்களை எழுப்பியவாறு தூதரகத்தின் ஜன்னல், கதவுகளை இரும்பு கம்பிகளால் தாக்கி சேதப்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications