புதைமணல்... நெருங்கிய கொமோடோ டிராகன்... தொகுப்பாளரை குத்திய ஷாருக்கான்
துபாயில் பாலைவன புதைமணலில் சிக்கிய ஷாருக்கானை நோக்கி கொமோடோ டிராகன் நெருங்கியதால் அவர் டென்சனார். இது நிகழ்ச்சி தொகுப்பாளரின் வேலை என்பதை அறிந்து அவர் கோபமடைந்தார்.
துபாய்: பாலைவன புதை மணலில் சிக்கிய நடிகர் ஷாருக்கானை கொமோடோ வேடமிட்டு நிகழ்ச்சி தொகுப்பாளர் மிரட்டியதால் அவர் கோபம் கொண்டார். நிகழ்ச்சி தொகுப்பாளருடன் ஷாருக்கான் சண்டைபோட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
துபாயில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளிப்பதற்காக நடிகர் ஷாருக்கான் நிகழ்ச்சி தொகுப்பாளினி நிஷானுடன் பாலைவனப் பகுதியில் சென்றார். அப்போது அவர்களின் கார் புதை மணலில் சிக்கியது. மூவரும் மணலில் சிக்கித் தவித்தனர்.

இந்த நிலையில் திடீரென கொமோடோ டிராகன் ஒன்று, ஷாருக்கான் மற்றும் நிசானை நோக்கி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொகுப்பாளினி நிஷான் கூச்சலிட்டார்.
உடனடியாக ஷாருக்கான் மணலை அள்ளி டிராகன் மீது வீசினார். அப்போது டிராகனுகனுக்குள் இருந்து நிகழ்ச்சி தொகுப்பாளர் ரமீஸ் வெளியே எட்டிப்பார்த்தார்.
இதனால் கோபம் கொண்ட ஷாருக், இது எல்லாம் ஒரு விளையாட்டா?, இதற்கு தான் நான் இந்தியாவில் இருந்து வந்தேன்? என்று சத்தம் போட்டார். உடனே அவர் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் ஷாருக்கான் சமாதானம் அடையவில்லை.
இதனையடுத்து நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், புதை மணலில் இருந்து ஷாருக்கானை மீட்டனர். மணலில் இருந்து வெளியே வந்த ரமீஸை தரையில் தள்ளி முகத்தில் ஓங்கு குத்தப் பார்த்தார்.
சமாதானம் பேசிய ரமீஸ் பேச்சால் மீண்டும் கோபம் அதிகரிக்கவே, அவரை தரையில் தள்ள தரதரவென இழுத்துச் சென்றார்.
அராப் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க ஷாருக்கானுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் தரப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இது நிஜமான கோபமா? அல்லது டிஆர்பிக்காக நடித்த கோபமா என்று சந்தேகம் எழுப்புகின்றனர் ரசிகர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications