Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெளியே வந்தவர் பாடி- டபுளா?.. மீண்டும் காணாமல் போன கிம் ஜோங் உன்.. வலுக்கும் வடகொரிய மர்மம்!

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் மீண்டும் காணாமல் போனதாக வெளியாகும் செய்திகள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

பியாங்யாங்: வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் மீண்டும் காணாமல் போனதாக வெளியாகும் செய்திகள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    தன்னை போல வேறு ஒருவரை அனுப்பினாரா கிம்.. வெடித்த சர்ச்சை! | Is Kim Jong Un Using a Body Double?

    உலகமே கொரோனாவால் அல்லல்பட்டுக்கொண்டு இருந்தாலும் கூட வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் மட்டும் உலகத்தின் கவனத்தை மிக எளிதாக தன் பக்கம் திருப்பி விடுகிறார். கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் கிம் ஜோங் உன் காணாமல் போனார்.

    அவர் இறந்துவிட்டதாக, மூளை சாவு அடைந்துவிட்டதாக செய்திகள் பரவிய வண்ணமிருந்தது. இந்த நிலையில் வடகொரியாவின் உழைப்பாளர் தினம் மற்றும் அங்கு இருக்கும் உர தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவிற்காக அவர் வெளியே வந்தார்.

    கிம் வெளியே வந்தார்

    கிம் வெளியே வந்தார்

    திடீர் என்று காணாமல் போய் இருந்த வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் 21 நாட்களுக்கு பின் கடந்த வாரம் மீண்டும் மக்கள் முன்னிலையில் தோன்றினார். அவரின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவிய நிலையில் அவர் மக்கள் முன்னிலையில் தோன்றினார். ஆனால் கிம் ஜோங் உன் அந்த 21 நாட்கள் எங்கே போனார் என்ற விவரம் வெளியாகவில்லை. வடகொரியா ஊடகங்கள் இதை பற்றி கருத்து தெரிவிக்கவில்லை. அந்நாட்டு அரசும் இது அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

    என்ன உண்மை?

    என்ன உண்மை?

    அவருக்கு உண்மையில் இதயத்தில் ஆபரேஷன் நடந்ததா அல்லது வேறு எங்காவது சென்று இருந்தாரா என்று விவரம் வெளியாகவில்லை. இந்த நிலையில் கிம் ஜோங் உன் மீண்டும் காணாமல் போய் இருக்கிறார். மே 1ம் தேதி வந்த கிம் ஜோங் உன் வெளியே எங்கும் காணப்படவில்லை. இரண்டு வாரமாக அவர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை.

    எங்கே இருக்கிறார்

    எங்கே இருக்கிறார்

    அவர் எங்கே தங்கி இருக்கிறார், என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அவருக்கு உண்மையில் உடலில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? அவர் தீராத நோயால் பாதிக்கப்ட்டுள்ளாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் அவரின் சொகுசு பங்களா இருக்கும் வோன்சோன் பகுதியில் மீண்டும் கிம் ஜோங் உன்னின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாட்டிலைட் புகைப்படங்கள் மூலம் இந்த கப்பல் அங்கே நிறுத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மீண்டும் சொகுசு பங்களா

    மீண்டும் சொகுசு பங்களா

    இதனால் மீண்டும் கிம் ஜோங் உன் அங்கே இருக்கும் தனது சொகுசு பங்களாவிற்கு சென்றுவிட்டாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அங்கு அவருக்கு மீண்டும் சிகிச்சை நடக்கிறதா என்றும் கேள்வி எழுந்துள்ளது.இதனால் கிம் ஜோங் உன் கடந்த மே 1ம் தேதி தன்னுடைய பாடி டபுள் எனப்படும் உடல் இரட்டையரை அனுப்பியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    உடல் இரட்டையர் வந்தார்

    உடல் இரட்டையர் வந்தார்

    தனக்கு பதிலாக தன்னுடைய உடல் இரட்டையரை அவர் அனுப்பி இப்படி செய்து இருக்கலாம் என்று பலர் பேச தொடங்கி உள்ளனர். கிம் ஜோங் உன் வெளியே வந்த போது வெளியான அவரின் புதிய புகைப்படங்கள் பெரிய அளவில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி கிம் ஜோங் உன்னின் புதிய புகைப்படத்தில், வீடியோவில் அவர் வேறு மாதிரி இருந்தார்.

    தோற்றத்தில் வித்தியாசம்

    அவரின் பற்கள் உடைந்துள்ளது. அவரின் இமை வேறு மாதிரி இருக்கிறது. கண்கள் கூட வேறு மாதிரி உள்ளது. அதோடு கன்னம் கூட வேறு மாதிரி இருக்கிறது. இது உண்மையில் கிம் ஜோங் உன் இல்லை என்கிறார்கள். இந்த புகைப்படம் தொடர்பாக பலர் சந்தேகம் எழுப்பி இருந்தார். கிம் ஜோங் உன் தனக்கு என்று பாடி டபுள் எனப்படும் உடலை இரட்டையரை வைத்து இருந்தார். தன்னை பாதுகாத்துக் கொள்ள அவ்வப்போது தன்னை போலவே இருக்கும் உடல் இரட்டையரை அவர் வெளியே அனுப்பி உள்ளார் என்றும் சந்தேகம் எழுப்பி இருந்தனர்.

    அமெரிக்கா கருத்து

    அமெரிக்கா கருத்து

    இந்த நிலையில் மீண்டும் கிம் ஜோங் உன் காணாமல் போய் உள்ளார். வெள்ளை மாளிகையின் மூத்த பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் இது தொடர்பாக பேசுகையில், அவர் கடைசியாக உர தொழிற்சாலையில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அதன்பின் அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. அவர் மீண்டும் காணவில்லை. ஆனால் இந்த முறை அவரின் உடலுக்கு எதுவும் பிரச்சனை இல்லை என்பது மட்டும் உறுதியாகிறது. அவர் நன்றாகவே இருக்கிறார் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+