ராணுவ தளபதியை வெட்டிக் கொன்று.. பிரான்ஹா மீன்களுக்கு இரையாக்கிய கிம் ஜாங் உன்
ராணுவ அதிகாரியை வடகொரிய அதிபர் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது
Recommended Video
பியாங்யாங்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மீது மீண்டும் ஒரு பரபரப்பு கிளம்பியுள்ளது. தனக்குப் பிடிக்காத ராணுவ அதிகாரியை சுட்டுக் கொன்று அவரது உடலை அபாயகரமான பிரான்ஹா மீன்கள் உள்ள தொட்டியில் துண்டு துண்டாக வெட்டிப் போட்டு விட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி
உள்ளது.
இந்த தளபதியானவர், கிம்முக்கு எதிராக புரட்சி செய்ய திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதை தொடர்ந்து அவரை படுகொலை செய்துள்ளது கிம் ஜாங் உன்னின் ராணுவம்.
கொலை செய்யப்பட்டவர் ஜெனரல் பதவியில் இருந்தவர் போல. கடந்த மே மாதம்தான் தனது உதவியாளரை கொலை செய்தார் கிம் ஜாங் உன். இதேபோல அவர் பலரை தலை துண்டித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தவர் என்பது நினைவிருக்கலாம்.

மீன் தொட்டி
நேற்று கொலை செய்யப்பட்ட வட தளபதியை பியாங்யாங் நகரில் உள்ள கிம்மின் வீ்டு வளாகத்தில் உள்ள பெரிய மீன் தொட்டியில் வைத்துக் கொலை செய்துள்ளனர். முதலில் அவரை கொன்று விட்டனராம். பின்னர் அந்த தொட்டியில் அவரது உடலை வீசியுள்ளனர். அந்த தொட்டி முழுவதும் அபாயகரமான பிரான்ஹா மீன்களைப் போட்டுள்ளனர்.

பிராஹா மீன்கள்
இந்த பிரான்ஹா மீன்கள் குட்டி சுறா மீன்கள் போல. எது கிடைத்தாலும் சாப்பிடக் கூடியவை. அந்த தளபதியின் உடலையும் இந்த மீன்களுக்கு இரையாக்கியுள்ளார் கிம் ஜாங் உன். பிரேசில் நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கான பிரான்ஹா மீன்களை வாங்கி வளர்த்து வருகிறாராம் கிம். அந்த மீன்களுக்குத்தான் தளபதியை இரையாக்கியுள்ளார்.

உறுதிப்படுத்தவில்லை
தொட்டியில் உடலை வீசும் முன்பு அவரது கை மற்றும் கால்களை தனியாக வெட்டி எறிந்துள்ளனர். மிகக் கொடூரமான முறையில் இந்த படுகொலை நடந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் தளபதியை உயிருடன் மீன் தொட்டியில் போட்டுக் கொன்றார்களா என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது. அது உறுதிப்படுத்தப்படவில்லை.

ஜேம்ஸ்பாண்ட்
பிரான்ஹா மீன்கள் குறித்து பல பரபரப்புத் தகவல்கள் உள்ளன. இவை மிகவும் கூரிய பற்களைக் கொண்டவை. இரை கிடைத்ததும் அதை சில நிமிடங்களில் தின்று தீர்த்து விடக் கூடியவை. இந்த மீன்கள் குறித்து 1965ம் ஆண்டு வெளியான யூ ஒன்லி லிவ் டிவைஸ் என்ற ஜேம்ஸ் பாண்ட் படத்தில் காட்சி அமைத்திருப்பார்கள். அதைப் பார்த்துதான் வட கொரிய சர்வாதிகாரியும் இதுபோல கொன்றிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
கிம் ஜாங் உன் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படி தனக்குப் பிடிக்காதவர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கப் போகிறாரோ.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications