Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நுபுர் சர்மாவிற்கு எதிராக போராடிய இந்திய ஊழியர்களை திருப்பி அனுப்பிய குவைத்? மூத்த அதிகாரி மறுப்பு

Subscribe to Oneindia Tamil

குவைத் சிட்டி: பாஜக நுபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக குவைத்தில் போராட்டம் செய்த வெளிநாட்டு ஊழியர்கள் குவைத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இந்திய ஊடகங்களில் வெளியான செய்தியை பல்வேறு குவைத் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தை நேரடியாக இகழ்ந்து, சில அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை பேசி இருந்தார்.

அவரின் இந்த பேச்சு உலகம் முழுக்க கடும் விமர்சனங்களை சந்தித்தது. பாஜக நிர்வாகி நவீன் ஜிண்டாலும் நபிகள் நாயகத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

கத்தார், குவைத்

கத்தார், குவைத்

இவரின் கருத்துக்கள் சர்ச்சையான நிலையில் மகாராஷ்டிராவில் இவருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது. அதேபோல் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இவருக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் இந்த விவகாரத்தை கத்தார், ஈரான் உள்ளிட்ட நாடுகள் விடவில்லை. இந்தியா இதற்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் கூறியது. குவைத்தும் இந்தியாவிற்கு கண்டனம் தெரிவித்து இருந்தது.

 நுபுர் சர்மா

நுபுர் சர்மா

இந்த நிலையில் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குவைத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அந்நாட்டு குடிமக்கள் பல இடங்களில் போராட்டங்களை மேற்கொண்டனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று Fahaheel என்ற பகுதியில் தொழுகைக்கு பின் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் இந்த குறிப்பிட்ட போராட்டம் அங்கு இருக்கும் வெளிநாட்டவர்கள் மூலம் நடத்தப்பட்டது.

குவைத் பயணம்

குவைத் பயணம்

அதாவது பணிக்காக குவைத்தில் தங்கி இருக்கும் மற்ற நாட்டினர் மூலம் நடத்தப்பட்டது. இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட பலர் இந்த போராட்டத்தில் குவைத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு எதிராக முன்பே குவைத் அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது. அங்கு போராட்டம் நடத்த கூடாது என்று குறிப்பிட்டு இருந்தது. ஆனால் அதை மீறி இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது

போராட்டம் பின்னணி

போராட்டம் பின்னணி

இதையடுத்தே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை நாட்டில் இருந்து வெளியேற்ற குவைத் அரசு முடிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டன . இவர்களை கண்டுபிடித்து கைது செய்ய அந்நாட்டு அரசு முடிவெடுத்து உள்ளதாகவும் செய்திகள் வந்தன.. அதன்பின் இவர்கள் மீது முழுமையாக விசாரணை நடத்தி, இவர்களை நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று என்று குவைத் அரசு உத்தரவிடும், இவர்களுக்கு குவைத செல்ல தடை விதிக்கப்படும் என்றும் இந்திய ஊடக செய்திகளில் கூறப்பட்டது.

Recommended Video

    Uttar Pradesh போராட்டம் எதிரொலி.. மீண்டும் புல்டோசரால் இடிக்கப்படும் வீடுகள் *India
    குவைத் விதி என்ன?

    குவைத் விதி என்ன?

    குவைத் விதிகளின்படி, வெளிநாட்டினர், அங்கு வேலை பார்க்கும் பிற நாட்டினர் போராட்டங்களை மேற்கொள்ள கூடாது. அப்படி மேற்கொண்டால் அவர்களின் விசா நீக்கப்பட்டு, உடனே அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பது குவைத் விதி. அதன்படியே அங்கு போராட்டம் செய்த இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு ஊழியர்கள் வெளியேற்றப்பட உள்ளனர். அதோடு இவர் குவைத்திற்கு மீண்டும் வர மொத்தமாக தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மூத்த அதிகாரி மறுப்பு

    மூத்த அதிகாரி மறுப்பு

    குவைத்தை சேர்ந்த மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மையத்தின் தலைவர், குவைத் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட ஆய்வுகளுக்கான பயிற்சி ஆணையத்தின் உறுப்பினர் முஜிபில் இது பற்றி தெரிவிக்கையில், இந்துத்துவா கும்பல் குவைத் பற்றி பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள். போராட்டங்கள் காரணமாக யாரையும் இங்கு வெளியேற்றவில்லை. பாஜக ஐடி செல் எங்கள் மக்களின் மனநிலையை மாற்ற முடியாது, என்று குறிப்பிட்டுள்ளார். அங்கு பணியாற்றும் இந்தியர்கள் பலரும் நாங்கள் இங்கேதான் இருக்கிறோம்.. எங்களை யாரும் வெளியேற்றவில்லை என்ற கருத்தை தெரிவித்துள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+