சொன்னதை செய்த டிரம்ப்.. போதை பொருள் வழக்கில்.. குவைத் சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க கைதிகள் விடுதலை
குவைத்: போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் அமெரிக்கர்கள் பலரும் குவைத் நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை விடுவிக்க அமெரிக்கா தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், இப்போது அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அதன்படி போதைப்பொருள் விவகாரத்தில் கடுமையான விதிமுறைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று குவைத். அங்கு வெளிநாட்டினர் உட்பட யார் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் குவைத் சிறைகளில் ஆண்டுக் கணக்கில் கூட அடைக்கப்பட்டுள்ள பல வெளிநாட்டுக் கைதிகள் உள்ளனர்.

குவைத் அரசு விடுவிப்பு
இந்தச் சூழலில் திடீரென அங்குப் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல அமெரிக்கக் கைதிகளை குவைத் விடுவித்துள்ளது.. ராணுவ வீரர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் உட்படப் பல அமெரிக்கர்களை குவைத் விடுவித்துள்ளது. இது குவைத் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் விடுவிப்பு
டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள உயர்மட்ட தூதர் ஆடம் போஹ்லர் சமீபத்தில் தான் குவைத் நாட்டிற்குச் சென்று திரும்பியிருந்தார். அப்போதே குவைத்தில் சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்கர்களை மீட்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. குவைத்தில் உள்ள அமெரிக்கர்களை அழைத்து வர பல மாதங்களாகவே தொடர் முயற்சி எடுக்கப்பட்டு வரும் சூழலில், குவைத் இப்போது கைதிகளை விடுவித்துள்ளது.
முதற்கட்டமாக தற்போது விடுவிக்கப்பட்டுள்ள ஆறு பேர் குவைத்திலிருந்து விமானம் மூலம் நியூயார்க்கிற்கு வந்தனர். அவர்களுடன் சட்ட ரீதியான உதவிகளை வழங்கிய ஆலோசகர் ஜோனதன் ஃபிராங்க்ஸும் நியூயார்க் சென்றார். அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய ஃபிராங்க்ஸ், "மனிதாபிமான நடவடிக்கையில் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்காக குவைத் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.
பின்னணி
போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க கடுமையான சட்டங்கள் உள்ள நாடுகளில் ஒன்று குவைத். அமெரிக்கர்கள் பலரும் குவைத் நாட்டில் வேலை செய்து வரும் நிலையில், அவர்களில் பல ராணுவ ஒப்பந்ததாரர்கள் மற்றும் வீரர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகக் கைதாகியுள்ளனர். அவர்களில் பலரும் ஆண்டுக் கணக்கில் கூட குவைத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதாகியுள்ள பல அமெரிக்கர்கள் சிறையில் மோசமாக நடத்தப்பட்டதாக அவர்களின் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.
மேலும், சிலர் தாங்கள் எந்தவொரு குற்றமும் செய்யவில்லை என்றும் பொய்யான குற்றச்சாட்டில் சிறையில் இருப்பதாகவும் கூறுகிறார்கள். இருப்பினும் குவைத் அதிகாரிகள் இது தொடர்பாக எந்தவொரு கருத்தும் கூறவில்லை.
குவைத் சட்டங்கள்
குவைத் நாட்டை பொறுத்தவரை அங்குப் பூரண மது விலக்கு அமலில் இருக்கிறது. மேலும், போதைப்பொருள் பயன்பாட்டிற்கும் மிகக் கடுமையான தண்டனைகளை வைத்துள்ளன. யாராவது மது அல்லது போதைப் பொருள் உடன் கைது செய்யப்பட்டால் அவர்களுக்குப் பல ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி..! சில நேரங்களில் மரண தண்டனை கூட விதிக்கப்படும்.
இதுதான் காரணம்
குவைத் நாட்டிற்குச் செல்லும் அமெரிக்கப் பயணிகளுக்கு அங்குள்ள கடுமையான சட்டங்கள் குறித்து அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கைகளை வழங்கி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களின்படி, போதைப்பொருள் அல்லது மது தொடர்பாக அமெரிக்க வீரர்கள் கைது செய்யப்பட்டாலும் அவர்களை குவைத் சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியாது. அதேநேரம் ராணுவம் சார்ந்து ஒப்பந்தங்களை மேற்கொள்ள குவைத் நாட்டிற்கு அமெரிக்க ஒப்பந்ததாரர்கள் அதிகளவில் செல்லும் நிலையில், அவர்களுக்கு இந்த சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைப்பதில்லை.
இதன் காரணமாகவே ஒப்பந்ததாரர்களாக குவைத் செல்லும் அமெரிக்கர்கள் எளிதாகக் கைதாகி சிறையில் தள்ளப்படுகிறார்கள். அதேநேரம் வெளிநாடுகளில் கைதாகி சிறையில் உள்ளவர்களைத் தாயகம் அழைத்து வருவேன் என டிரம்ப் பிரச்சாரத்தின் போதே உறுதியளித்திருந்தார். அவர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே அமெரிக்கர்கள் குவைத் நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications