For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குவைத் விடாது? நுபுர் சர்மாவை எதிர்த்து போராடிய இந்தியர்களை நாடு கடத்த பிளானா? டாப் நிர்வாகி மறுப்பு

Google Oneindia Tamil News

குவைத் சிட்டி: நுபுர் சர்மாவிற்கு எதிராக போராடிய இந்தியர்களை கைது செய்து, அவர்களை இந்தியாவிற்கு நாடு கடத்த குவைத் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் குவைத்தை சேர்ந்த டாப் நிர்வாகி ஒருவர் இதை மறுத்துள்ளார்.

குவைத் விதிகளின்படி, வெளிநாட்டினர், அங்கு வேலை பார்க்கும் பிற நாட்டினர் போராட்டங்களை மேற்கொள்ள கூடாது. அப்படி மேற்கொண்டால் அவர்களின் வீசா நீக்கப்பட்டு, உடனே அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பது குவைத் விதி.

சொந்த நாட்டு மக்கள் அங்கு போராட்டம் செய்யலாம். ஆனால் வெளிநாட்டினர் அங்கு போராட்டம் செய்ய முடியாது.

நுபுர் சர்மாவிற்கு எதிராக போராடிய இந்திய ஊழியர்களை திருப்பி அனுப்பிய குவைத்? மூத்த அதிகாரி மறுப்புநுபுர் சர்மாவிற்கு எதிராக போராடிய இந்திய ஊழியர்களை திருப்பி அனுப்பிய குவைத்? மூத்த அதிகாரி மறுப்பு

போரட்டம்

போரட்டம்

அதன்படியே குவைத்தில் பாஜக நுபுர் சர்மாவிற்கு எதிராக போராட்டம் செய்த இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு ஊழியர்கள் வெளியேற்றப்பட உள்ளனர் என்று தகவல்கள் வருகின்றன. அதோடு இவர்கள் குவைத்திற்கு மீண்டும் வர மொத்தமாக தடை விதிக்கப்படும் என்றும் தகவல்கள் வருகின்றன. பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

நுபுர் சர்மா

நுபுர் சர்மா

இதை கத்தார், குவைத் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கடுமையாக எதிர்த்தன. பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இதை எதிர்த்து இந்தியாவில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. கடந்த வெள்ளிக்கிழமை அன்று குவைத்தில் Fahaheel என்ற பகுதியில் தொழுகைக்கு பின் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டம் நடத்தப்பட்டது

போராட்டம் நடத்தப்பட்டது

இந்த போராட்டம் அங்கு வசிக்கும் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் மூலம் நடத்தப்பட்டது. இந்த நிலையில்தான் குவைத் விதிகளின்படி, வெளிநாட்டினர், அங்கு வேலை பார்க்கும் பிற நாட்டினர் போராட்டங்களை மேற்கொள்ள கூடாது. ஆனால் இவர்கள் விதியை மீறி போராட்டம் செய்த காரணத்தால் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. குவைத்தில் இருக்கும் பிரபல இந்திய செய்தியாளர் ஜீவ்ஸ் எரிஞ்சேரி இது தொடர்பாக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

குவைத் விடாது

குவைத் விடாது

விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்.. குவைத் அரசாங்கம் இது போன்ற போராட்டங்களை வேடிக்கை பார்க்காது. வெளிநாட்டினர் தங்கள் நாட்டில் போராடினால் குவைத் அரசாங்கம் அவர்களை சும்மா விடாது. அவர்களிடம் கடுமை காட்டும். நுபுர் சர்மாவிற்கு எதிராக போராடியவர்கள் மீண்டும் கண்டிப்பாக குவைத் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அவர்களை எளிதாக விட்டுவிடாது.

Recommended Video

    Uttar Pradesh போராட்டம் எதிரொலி.. மீண்டும் புல்டோசரால் இடிக்கப்படும் வீடுகள் *India
    கண்டிப்பு காட்டும்

    கண்டிப்பு காட்டும்

    தங்கள் நாட்டு விதிகளை குவைத் மிக தீவிரமாக பின்பற்ற கூடியது. இன்னும் சில வாரங்களில் அங்கு போராடிய இந்தியர்கள் எல்லோரும், இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார்கள். இந்திய அரசாங்கத்தால் இதில் தலையிட முடியாது. அது அவர்களின் உள்நாட்டு விதிகள் செய்ய முடியாது. இதனால் இந்திய வெளியுறவுத்துறை அங்கு போராடிய இந்தியர்களுக்கு உதவியாக களமிறங்காது, என்று தெரிவித்துள்ளார்.

    நுபுர் சர்மா போராட்டம்

    நுபுர் சர்மா போராட்டம்

    குவைத் அரசு வட்டார தகவல்களின்படி நுபுர் சர்மாவிற்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்ட வெளிநாட்டவர்களை நாட்டில் இருந்து வெளியேற்ற குவைத் அரசு முடிவு செய்துள்ளது. இவர்களை கண்டுபிடித்து கைது செய்ய வெளியேற்ற அந்நாட்டு அரசு முடிவெடுத்து உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் குவைத்தை சேர்ந்த டாப் நிர்வாகி ஒருவர் இதை மறுத்துள்ளார். குவைத்தை சேர்ந்த மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மையத்தின் தலைவர், குவைத் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட ஆய்வுகளுக்கான பயிற்சி ஆணையத்தின் உறுப்பினர் முஜிபில் இது பொய்யான செய்தி, இதில் உண்மை இல்லை, எல்லாம் வதந்தி என்று மறுத்துள்ளார். இந்த செய்தியாளர் தவறான செய்தி வெளியிட்டுள்ளார். குவைத் அரசு இதுவரை அதிகாரபூர்வ விளக்கம் எதையும் தரவில்லை.

    English summary
    Kuwait won't go easy on anyone who protested against Nupur Sharma says a journalist. நுபுர் சர்மாவிற்கு எதிராக போராடிய இந்தியர்களை கைது செய்து, அவர்களை இந்தியாவிற்கு நாடு கடத்த குவைத் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X