China: சீனாவில் பொது இடத்தில் ஆப்பிள் லேப்டாப்பை வைத்து சென்ற நபர்.. அரை மணி நேரம் கழித்து நடந்த அதிசயம்
பீஜிங்: சீனாவில் (China) பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த மால் ஒன்றில், உணவகத்தின் டேபிளில் விலை உயர்ந்த லேப்டாப் ஒன்றை வைத்துவிட்டு, அதை அரை மணி நேரம் கழித்து வந்தால் இருக்குமா? இல்லையா? என்று சோதித்து பார்க்க யூடியூபர் ஒருவர் முயற்சி செய்துள்ளார். திரும்பி வந்த அவருக்கு நம்பவே முடியாத ட்விஸ்ட் காத்திருந்தது. இது குறித்த தகவலை அந்த யூடியூபர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில், இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
சீனாவைப் பொறுத்தவரை, அந்நாட்டின் பழக்கவழக்கங்கள், மக்களின் உணவுமுறை, அவர்களின் அசுர வளர்ச்சி என எல்லாமே தற்போது வியக்கும்படியாக உள்ளது. சீனா ஏற்கனவே 2050 ஆம் ஆண்டில் வாழ்கிறது என்று சொல்லும் அளவிற்கு, தொழில்நுட்பத்திலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அந்த நாட்டுமக்களின் லைஃப்ஸ்டைல் மாறிவிட்டது.

லேப்டாப்பை வைத்து சென்ற நபர்
சீனாவுக்கு செல்லும் சமூக வலைதள பிரபலங்கள் அவ்வப்போது இது குறித்து வெளியிடும் வீடியோ வைரலாகின்றன. அந்த வகையில் தான், சோஷியல் மீடியா இன்ப்ளூயன்சரான டின்கோ என்பவர் சீனாவின் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் விபரீத முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதாவது, தனது விலைமதிப்புமிக்க, முக்கியமான லேப்டாப்பை பொது இடத்தில் வேண்டுமென்றே வைத்துவிட்டு சென்றுள்ளார்.
அடுத்த 30 நிமிடங்கள் கழித்து அங்கு வந்து பார்த்தபோது, நம்ப முடியாத ட்விஸ்ட் காத்திருந்தது. அதாவது, ஒருவரும் அதை தொட்டு கூட பார்க்கவில்லை. இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் பரவும் வீடியோ
அந்த வீடியோவில், மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு வணிக வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றின் மேசையில் ஆப்பிள் லேப்டாப்பை வைத்துவிட்டு செல்கிறார். அரை மணி நேரமாக மால் முழுவதும் சுற்றிவிட்டு, மீண்டும் லேப்டாப் வைத்த இடத்திற்கே திரும்பிச் செல்கிறார். திரும்பி வரும் போது லேப்டாப் இருக்காது என்று நினைத்தவருக்கு, லேப்டாப் இருந்த இடத்தில் அப்படியே இருந்துள்ளது. இதை முழுவதுமாக தனது வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் கருத்து
இந்த பதிவுடன், "பாரிஸ் ஆக இருந்தால் 8 விநாடிகளில், புதுடெல்லி ஆக இருந்தால் 12 விநாடிகளில், அமெரிக்காவின் நியூயார்க் ஆக இருந்தால் 25 விநாடிகளில் மாயமாகியிருக்கும். ஆனால் சீனாவில் அப்படியே பாதுகாப்பாக இருந்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவிற்கு இணையத்தில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை சுவாரஸ்யமாக பதிவிட்டு வருகின்றனர். "சீனாவின் கடுமையான பொது கண்காணிப்பு மற்றும் மக்களிடம் உள்ள ஒழுக்கத்தை இது காட்டுகிறது," என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "இதுவே பிரேசிலாக இருந்தால், திரும்பி வரும் போது லேப்டாப்பும் இல்லை, லேப்டாப் இருந்த மேசையும் அங்கே இருக்காது" என்று பதிவிட்டுள்ளார்.
கையில் இருக்கும்போதே பறித்து விடுவார்கள்
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "தென் ஆப்பிரிக்கா சென்றால் மாலில் வைத்துவிட்டு போக வேண்டாம். அவர்கள் உங்கள் கையிலிருந்தே பறித்து சென்று விடுவார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு நெட்டிசன் கூறுகையில், "நான் ஒருமுறை சீனாவுக்கு சென்ற போது, எனது பையை உணவகம் ஒன்றில் மறந்துவிட்டு சென்றேன். அதில் 10 ஆயிரம் யுவான் இருந்தது. நண்பர்களுடன் குடிக்கச் சென்றதால், 8 மணி நேரத்திற்கு பிறகே பையை மறந்துவிட்டதை நினைவுகூர்ந்தேன்.
உணவகத்திற்குத் திரும்பிச் சென்றபோது, அனைத்தும் அங்கேயே இருந்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு சீனா எனக்கு மிகவும் பிடித்த நாடாக மாறிவிட்டது. பல ஆசிய நாடுகள் மிகவும் பாதுகாப்பானதாக உள்ளன. மேற்கு நாடுகளைப் போல அல்லாமல், ஆசிய நாட்டு மக்களின் எண்ணம் வித்தியாசமானது. நான் கொலம்பியாவைச் சேர்ந்தவன்" என்று கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications