லெபனான் நைட் கிளப் துப்பாக்கிச் சூட்டில் 2 போலீஸ் அதிகாரிகள் உட்பட 8 பேர் பலி
பெய்ரூட்: லெபனான் நைட் கிளப் ஒன்றில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 அதிகாரிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
மத்திய கிழக்கு நாடான லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஜோனியே நகரின் நைட் கிளப் ஒன்றில் போதைப்பொருள் கடத்தல் விவகாரங்களில் தப்பியோடிய குற்றவாளிகள் இருவரை கைது செய்வதற்காக போலீசார் நேற்று சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் லெபனான் ராணுவ உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பதுங்கியிருந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் அதிகாரிகள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 அதிகாரிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ராணுவ போலீசார் சார்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் 8 பேர் உயிரிழந்தனர். 2 இளம் பெண்கள் உட்பட 4 அப்பாவி பொதுமக்களும கொல்லப்பட்டனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட நைட் கிளப்பிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ராணுவ உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications