அமெரிக்க தீவிரவாத வழக்கில் அபு ஹம்சா குற்றவாளி - 100 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்
நியூயார்க்: அமெரிக்கச் சிறையில் உள்ள அபு ஹம்சா என்ற கைதி, பல்வேறு தீவிரவாத தாக்குதல்கள், சதித் திட்டம் உள்ளிட்ட வழக்குகளில் குற்றவாளி என்று கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 100 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.
அபு ஹம்சா (56), இங்கிலாந்து நாட்டில் முஸ்லிம் மத போதகராக இருந்தவர். அவர் மீது மத துவேஷத்தைத் தூண்டி, பல தீவிரவாத தாக்குதல்களுக்கு துணையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இவர் மத குருவாவதற்கு முன்னர், நிர்வாண நடன விடுதியின் முதலாளியாக இருந்ததசாகவும், மசூதியின் குரு என்ற போர்வையில் தீவிரவாத பயிற்சிக்கு ஆட்களை சப்ளை செய்யும் ஏஜெண்டாக செயல்பட்டு வந்ததாகவும் கூறி இங்கிலாந்து அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.
மேலும், அபு அல்கொய்தா தீவிரவாத அமைப்புக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்து வந்ததாகவும், அமெரிக்காவுக்கு தீவிரவாதிகளை அனுப்பி வைத்து அங்கே முகாம் தொடங்கவும் ஏற்பாடு செய்ததாகவும், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் பயிற்சி முகாம்களுக்கு ஆட்களை தேர்வு செய்து அனுப்பி வைத்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
அபு ஹம்சாவை தங்களிடம் விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியது அமெரிக்கா. சுமார் 10 ஆண்டு கால சட்டப் போராட்டத்துக்கு பின்னர் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அபு மீது அமெரிக்காவில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
தற்போது அமெரிக்காவின் சூப்பர்மேக்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபு மீது சுமத்தப்பட்ட 11 குற்றச்சாட்டுகளும் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளி என்பது நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. வரும் செப்டம்பர் மாதம் இந்த வழக்கில் அவருக்கான தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.
அதிகபட்சமாக அபுவுக்கு 100 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கருதுகின்றனர். இதனால், சாகும் வரை இவர் கைதியாகவே இருக்க நேரிடும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே ஏமன் நாட்டில் 4 வெளிநாட்டினரை கடத்திக் கொன்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அபுவை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications