For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

7 பேரை பலிகொண்ட லண்டன் தாக்குதல் பின்னணியில் 7 பெண்கள்.. பரபரப்பு தகவல்கள்!

லண்டன் தாக்குதலுக்கு உதவியதாக 7 பெண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

By Devarajan
Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் வேனை ஏற்றியும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தினார்கள். அதில் 7 பேர் பரிதாபமாகப் பலியாகினர். தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளை அப்போதே லண்டன் போலீசார் சுட்டுக் கொன்றனர்.

கொல்லப்பட்ட தீவிவாதிகளில் குர்ரம் பட் , ரஷீத் ரெடோன் என்று 2 பேரின் அடையாளம் தெரிந்தது. இவர்களில் குர்ரம் பட் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவன். இங்கிலாந்து குடியுரிமை பெற்றவன். கிழக்கு லண்டனில் பார்க்கிங் பகுதியில் பல ஆண்டுகளாக தங்கியிருந்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

 London Metropolitan Police arrest 12 in connection with London Bridge attack including 7 Women

ரெடோனும் பார்கிங் பகுதியில் தங்கியிருந்தான் என்றும், அவன் மொராகோ - லிபியா பெற்றோருக்கு பிறந்தவன் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. தீவிரவாதிகளின் கொடூரத் தாக்குதல் தொடர்பாக லண்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது வரை 12 பேரை கைது செய்துள்ளனர்.

காய்த்தானவர்களின் 7 பேர் பெண்கள் ஆவர். இவர்கள் அனைவரும் தீவிரவாத சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தீவிரவாதிகளுக்கு உதவியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் லண்டனில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா? என்பதை கண்டறிய, போலீசார் விசாரணை வளையத்தை விரிவுப்படுத்தி தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

English summary
London Metropolitan Police arrest 12 in connection with London Bridge attack including 7 Women. Further Investigation in process.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X